"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

Oct 24, 2026 - 13:01
0
"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'.

இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார்.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் வெளியான மறுநாள் 'டிரோன்ஸ்' படம் வெளியானது.

'டிரோன்ஸ்'
'டிரோன்ஸ்'

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் உரிய தியேட்டர் கிடைக்கவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய தயாரிப்பாளர் சதீஸ், " ஒரு பெரியப் படம் வரும்போது சின்னப் படங்கள் வரக்கூடாதா? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் .

நிச்சயமாகத் தலைவர் (ஜெயிலர்-2) படத்திற்கு டிக்கெட் ஹவுஸ்ஃபுல் ஆகும். டிக்கெட் கிடைக்காமல் போகும். அப்போது எங்கள் படத்திற்கு வருவார்கள் என்று நினைத்து தான் படத்தை வெளியிட்டோம்.

படம் நன்றாக இருந்தால் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நினைத்தோம். படம் நன்றாக இருக்கிறது. தவறாகப் படம் பண்ணியிருந்தால் கூட இப்போது நாங்கள் பேசியிருக்க மாட்டோம்.

'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்
'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

சினிமா இன்டஸ்ட்ரியின் சப்போர்ட் எங்களுக்கு தேவைப்படுகிறது. எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. நல்ல படத்தை எடுத்துவிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்.

அவ்வளவு பணம் போட்டு படத்தை எடுத்திருக்கிறோம். தியேட்டர் கிடைத்தால் தான் மக்கள் படத்தை அங்கீகரித்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள்" என்று கண்கலங்கி பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User