"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

Mar 19, 2026 - 17:02
 0
"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது.

 சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார்.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கிறார்.

``நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார்.

உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம்.

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்
ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம், சஞ்சு சாம்சனின் முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த முகத்தை இழந்திருப்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னென்றால் சஞ்சு சாம்சன் முக்கிய அந்த அணிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0