Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' - திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

Apr 24, 2026 - 19:32
 0
Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' - திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார்.

ரித்விகா
ரித்விகா

கடந்தாண்டு இவரின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார் ரித்விகா.

ஆனால், அந்தப் புகைப்படங்களைப் பின்பு நீக்கினார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ரித்விகா, இது குறித்துப் பேசியிருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர், "உங்களுடைய திருமணத்தில் எதுவும் பிரச்னையா?" எனக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ரித்விகா, "திட்டமிட்டப்படி அந்த விஷயங்கள் நடக்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

ரித்விகா
ரித்விகா

மற்றொரு ரசிகர் அவரிடம், "நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, "இல்லை, ஆனால் விரைவில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நம்புகிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

ரித்விகா கடைசியாக, 'தண்டகாரண்யம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவருடைய பெயரில் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி, வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0