ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன்

May 14, 2026 - 19:31
0
ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது ஆக்கிடாவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜாமணி கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ராஜாமணியின் மனைவி ஜானகி கணவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்குச் சென்றிருந்த இவரது இரு மகன்களும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட ஜானகி
தற்கொலை செய்துகொண்ட ஜானகி

இதையடுத்து பூட்டியிருந்த கதவைத் தட்டியும் வெகுநேரமாகத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டு கதவினை உடைத்து சென்று பார்த்தபோது வீட்டினுள் இவர்களின் தாயார் ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும் தங்கள் தாயின் இறப்பைத் தாங்கிகொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளனர். உறவினர்கள் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தாயின் இறப்பினைத் தாங்கி கொள்ள முடியாத இரண்டாவது மகன் தினேஷ் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகன் தினேஷ்
தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகன் தினேஷ்

ரயிலில் சிக்கிய தினேஷின் உடல் ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை இழுத்து செல்லப்பட்டதால் சிதைந்து போனது. இதையடுத்து ரயில்வே போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜானகியின் இறப்பு குறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் இறப்பினால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய். தாயின் இறப்பினால் தற்கொலை செய்துகொண்ட மகன் என அடுத்தடுத்து நடந்த துயரத்தில் ஆக்கிடாவலசை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User