திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

Nov 01, 2026 - 10:01
0
திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரை சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இணைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நபரின் மனைவி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் பல இடங்களிலும் தேடிப் பார்த்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண்ணிற்கு சென்ற அழைப்புகளை ஆய்வு செய்து பார்க்கையில், தலைமைக் காவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் நாள்தோறும் பலமுறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறார்கள்.

police

இதான் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ரௌடி கணவனை கண்காணிப்பதாகச் சொல்லி அவன் மனைவியிடம் அறிமுகமாகி செல்போன் நம்பரை வாங்கியிருக்கிறார் நல்லூர் ஸ்டேஷன் ஏட்டு அலெக்ஸ் பாண்டியன். நாள்தோறும் அந்த பெண்ணிற்கு 30 முறைக்கு மேல் போன் செய்து தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அதோடு ரௌடியின் மனைவியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அந்த பெண் திடீரென தலைமறைவாகியிருக்கிறார். சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அந்த பெண் தலைமறைவானாரா மற்றும் காவலர் எந்த மாதிரியான பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User