விமானத்திற்குள் கஞ்சா புகைத்த பைலட்; கீழ்நோக்கி பறந்த விமானத்திற்குள் மிதந்த பயணிகள்; நடந்தது என்ன?
கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் 20 பயணிகளும், நான்கு பணியாளர்களும் காயமடைந்தனர்.
இவர்களில் இரண்டு பணியாளர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் கழுத்துப் பகுதிகளில் தண்டுவடக் காயங்களுக்கும் ஏற்பட்டன. இது போன்ற ஒரு சம்பவம் விமானத்தில் நடக்க வாய்ப்பு குறைவு என்பதால் பைலட் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தினாரா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.
கஞ்சா பயன்படுத்திய பைலட்
அந்த விமானத்தை இயக்கிய பைலட்டிற்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அவர் விமானத்தை ஓட்டியபடி கஞ்சா புகைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதனை உறுதி செய்து கொள்ள இரண்டாவது முறையாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையிலும் பைலட் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணையில் விமானம் திடீரென 300 அடி இறங்கியபோது பைலட் அவரது இறுக்கையில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. விமானத்தை இணை பைலட் இயக்கியுள்ளார். ஏர்பஸ் A320neo திடீரென 300 அடிக்கு இறங்கியபோது விமானம் நெகட்டிவ்-ஜி நிலைக்குச் சென்றது.
மிதந்த பைலட், பயணிகள்
இது பொதுவாக பைலட்டின் தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு அல்லது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக ஏற்படும். விமானம் திடீரென கீழே இறங்கியதால் புவிஈர்ப்பு விசை தற்காலிகமாகத் தலைகீழாகி, சீட் பெல்ட் அணியாத முதன்மை பைலட் மற்றும் பயணிகள் காற்றில் மிதந்து கூரையில் மோதினர்.
சீட் பெல்ட் அணியாமல் நின்றுகொண்டிருந்த முதன்மை விமானி முற்றிலும் நிலைதடுமாறி காற்றில் மிதந்ததால், அவரால் விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்க முடியாமல் போனது. எனினும் இணை பைலட் சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்கினார்.
விமானத்தில் நடந்தது என்ன?
விமானத்தில் பைலட் ஏர் கண்டிஷனிங் குறித்து மற்றொரு விவாதித்துக் கொண்டிருந்தபோது விமானத்தில் ஸ்டால் எச்சரிக்கை ஏற்பட்டு ஆட்டோ பைலட் துண்டிக்கப்பட்டது. உடனே விமானத்தின் முன்பகுதி மேல் நோக்கி உயர்ந்தது. இதையடுத்து இணை பைலட் விமானத்தின் முன் பகுதியைக் கீழ்நோக்கி இயக்கியதால் விமானம் 300 அடி சரிந்து நெகட்டிவ்-ஜி நிலைக்குச் சென்றது.
அந்த நேரத்தில்தான் பயணிகள் விமானத்தில் மோதி காயம் அடைந்தனர். பைலட் அரையில் இருந்த பொருட்களும் காற்றில் மிதந்தன.
பைலட் மிகவும் போராடி தனது இறுக்கைக்குச் சென்று சீட் பெல்ட்டை அணிந்து விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் விமானம் 300 அடி இறங்கி இருந்தது.
விமானம் நிலைப்படுத்தப்பட்டதும், இரு பைலட்களும் ஒருவரையொருவர் சரிபார்த்து, விமானி அறையின் நிலைமையைப் பார்வையிட்டனர். விமானத்தை கொல்கத்தாவில் தரையிறக்க முடிவு செய்து கொல்கத்தா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் விமானிகள் இறுதியில் விமானத்தை புதுடெல்லியில் தரையிறக்க முடிவு செய்தனர். இது குறித்து விமான போக்குவரத்துதுறை விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. சம்பவம் நிகழ்ந்ததற்கான சூழல் மற்றும் அதற்குக் காரணமான காரணிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு தகுந்த முன்னெச்சரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்கள் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)