விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

Jun 07, 2026 - 14:31
0
விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம். அதனால், தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த கட்சிகளில் விசிகவும் ஒன்று.

ஆதரவு கொடுத்த விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது தவெக.

ஆனால், அமைச்சரவையில் இடம்பெற்றதில் விசிகவிற்குள்ளேயே சிலருக்கு உடன்பாடு இல்லை.

இதனால், விசிகவில் இருக்கும் சிலர் திமுகவில் இணையலாம் என்கிற பேச்சு அடிக்கடி அடிபட்டு வந்தது.

ஸ்டாலின், திருமாவளவன்
ஸ்டாலின், திருமாவளவன்

இந்தப் பேச்சுகளை உண்மையாக்கும் விதமாக, முதல் விக்கெட்டாக திமுகவில் இன்று இணைந்துள்ளார் விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு.

இவர் 2021-ம் ஆண்டு செய்யூர் தொகுதி எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவருக்குப் பின், ஆளூர் ஷாநவாஸ், சிந்தனைச் செல்வன் ஆகியோர் வரிசையாக திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

முதலில், பேச்சுகள் அடிப்படும் போதே, விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால், அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கும் இந்த நேரத்தில், திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்தால் குழப்பம் ஏற்படும் என்று முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது தவெக.

ஒருவேளை, அந்தப் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், விசிகவில் இருந்து திமுகவில் பலர் இணையாமல் தடுக்கப்பட்டிருக்கலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User