Oscar Awards: ஆஸ்கர் ரேஸில் 2 இந்தியப் படங்கள்; இளையராஜா படத்தோடு நாகாலாந்து படம் சேர்ந்தது எப்படி?

Nov 25, 2026 - 15:31
0
Oscar Awards: ஆஸ்கர் ரேஸில் 2 இந்தியப் படங்கள்; இளையராஜா படத்தோடு நாகாலாந்து படம் சேர்ந்தது எப்படி?

99-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகளையும் ஆஸ்கர் அகாடமி கவனித்து வருகிறது.

இந்தாண்டு இந்தியாவின் சார்பாக 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவிற்கு மராத்தியத் திரைப்படமான 'கோந்தல்' அனுப்பப்பட்டிருக்கிறது.

Gondhal Poster
Gondhal Poster

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் நான்காவது மராத்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் தவாகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

எப்போதுமே ஒரு நாட்டின் சார்பாக 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவிற்கு ஒரேயொரு திரைப்படத்தை மட்டுமே அதிகாரப்பூர்வ என்ட்ரியாக அனுப்ப முடியும்.

அதன்படி, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு 'கோந்தல்' திரைப்படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கிறது. ஆனால், இந்தப் பிரிவுக்கு மற்றுமொரு இந்தியத் திரைப்படமும் சென்றிருக்கிறது.

அது ஆஸ்கர் அகாடமி கொண்டு வந்திருக்கும் புதிய விதியின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. உலகின் முக்கியமான 6 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உயரிய விருதைப் பெறும் திரைப்படம் நேரடியாக இந்தப் பிரிவுக்குத் தகுதி பெறும் என்கிற புதிய விதியை இந்தாண்டு ஆஸ்கர் அகாடமி அறிமுகப்படுத்தியிருந்தது.

அதன்படி, தேஜா ரியோ என்பவர் இயக்கியிருக்கும் 'ஆங்க்' எனும் கொன்யாக் மொழித் திரைப்படம் இப்பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இப்படம் டொரண்டோ திரைப்பட விழாவின் உயரிய விருதான பிளாட்பார்ம் விருதைப் பெற்றிருக்கிறது. அதன் மூலம் நேரடியாக ஆஸ்கருக்கு இப்படம் தகுதி பெற்றிருக்கிறது.

Angh Movie
Angh Movie

100 நாடுகள் தங்களின் சார்பாக 100 படங்களை இப்பிரிவுக்கு அனுப்பியிருக்கின்றன. இதைத் தாண்டி இன்னும் நான்கு படங்கள், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை வென்றதன் மூலம் இப்பிரிவுக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.

ஆனால், இது இறுதிப் பட்டியல் கிடையாது. இந்தப் பட்டியலிலுள்ள திரைப்படங்களை ஆஸ்கர் விருதுக் குழுவின் நடுவர்கள் பார்த்து, அதிலிருந்து 15 திரைப்படங்களைத் தேர்வு செய்வார்கள். அதிலிருந்தும் 5 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இறுதிப் பட்டியலுக்கு அனுப்பப்படும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User