இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்; ஆனால் லிமிட் உண்டு! டிசம்பர் இறுதியில் EPFO புதிய வசதி?

Nov 27, 2026 - 15:32
0
இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்; ஆனால் லிமிட் உண்டு! டிசம்பர் இறுதியில் EPFO புதிய வசதி?

இ.பி.எஃப்.ஓ 3.0 திட்டத்தின் கீழ், 2026 டிசம்பர் இறுதிக்குள் யூபிஐ வழியாக வருங்கால வைப்பு நிதிப் பணத்தை எடுக்கும் வசதியைத் தொடங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதைத் தடுக்கவும்,

நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும் குறைந்தபட்சம் ரூ.1,000 பரிவர்த்தனை வரம்பை விதிக்க இபிஎஃப்ஓ திட்டமிட்டு வருகிறது.

யு.பி.ஐ
யு.பி.ஐ

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், பி.எஃப் வாடிக்கையாளர்கள் பீம் செயலி மூலம் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பணம் கிடைப்பதற்காகக் காத்திருக்கும் நேரம் குறையும்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதும் 'புதிய சென்ட்ரலைஸ்டு ஐடி-எனேபிள்ட் சிஸ்டம் 2.0 (CITES 2.0)' தளத்தில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களை இ.பி.எஃப்.ஓ சரிசெய்து வருகிறது.

இந்த வசதி 2025-26 நிதியாண்டிலேயே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைத் தேவைகளால் தாமதமானது. தற்போது அடுத்த மாதம் அமலுக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், ரூ.1,000 எடுப்பதற்கும் மாதக் கணக்கில் ஏதேனும் லிமிட் உள்ளதா... பணத்தை எப்படி க்ளைம் செய்யலாம் என்கிற வழிமுறைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User