2027-ல் செல்வம் சேர்க்க வேண்டுமா? முதலில் மாற்ற வேண்டிய 5 பணப் பழக்கங்கள் என்னென்ன?
புத்தாண்டு பிறக்கும்போது உடற்பயிற்சி, ஆரோக்கியம், புதிய இலக்குகள் எனப் பல உறுதிமொழிகளை எடுக்கிறோம். ஆனால், நம்முடைய நிதி வாழ்க்கையை மேம்படுத்த என்ன திட்டமிடுகிறோம்?
நல்ல சம்பளம், வங்கியில் சேமிப்பு, மாதந்தோறும் SIP முதலீடு என எல்லாம் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு செல்வம் சேராமல் இருக்கிறதா? அதற்குக் காரணம் வருமானம் குறைவாக இருப்பது மட்டுமல்ல; பணத்தைக் கையாளும் பழக்கங்களும்தான்.
2027-ல் செல்வம் சேர்க்க உதவும் 5 முக்கியமான பணப் பழக்கங்கள் இதோ!
1. மீதமிருப்பதைச் சேமிக்காதீர்கள்!
மாதச் சம்பளம் வந்ததும் முதலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் ஒரு தொகையை ஒதுக்குங்கள். செலவு செய்துவிட்டு மீதமிருப்பதைச் சேமிப்பதைவிட, சேமிப்பைத் திட்டமிட்டு செலவு செய்வது சிறந்தது.
2. வருமானம் உயரும்போது முதலீட்டையும் உயர்த்துங்கள்!
சம்பளம் உயரும்போது வாழ்க்கைச் செலவுகளும் உயர்வது இயல்பு. ஆனால், சம்பள உயர்வுக்கு ஏற்ப முதலீட்டுத் தொகையையும் படிப்படியாக அதிகரிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். ஆண்டுதோறும் SIP தொகையை உயர்த்துவது நீண்டகாலத்தில் உதவலாம்.
3. இலக்கு இல்லாமல் முதலீடு செய்யாதீர்கள்!
குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குவது, ஓய்வுக்காலம் என ஒவ்வொரு இலக்குக்கும் தேவைப்படும் தொகையும் கால அவகாசமும் வேறுபடும். இலக்கை நிர்ணயித்து, பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குங்கள்.
4. அவசரத் தேவைக்கான நிதியை உருவாக்குங்கள்!
எதிர்பாராத மருத்துவச் செலவு அல்லது வேலை இழப்பு போன்ற சூழல்களில் முதலீடுகளைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, தனியாக அவசரகால நிதியைப் பராமரியுங்கள்.
5. முதலீடுகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யுங்கள்!
SIP தொடங்கிவிட்டால் மட்டும் போதாது. உங்கள் இலக்குகள், முதலீட்டுக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப முதலீடுகள் உள்ளனவா என்பதை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்!
செல்வம் சேர்ப்பது என்பது ஒரே நாளில் நடக்கும் விஷயமல்ல. சரியான நிதிப் பழக்கங்கள், தொடர்ச்சியான முதலீடு, பொறுமை ஆகியவற்றின் மூலம் நீண்டகால நிதி இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியும்.
2027-ஐ இன்னொரு புத்தாண்டாக மட்டும் பார்க்காமல், உங்கள் நிதி வாழ்க்கையைச் சீரமைக்கும் ஆண்டாக மாற்றுங்கள்!

2027-ல் செல்வம் சேர்ப்பது எப்படி?
40+ வயதினருக்கான சிறப்பு நிதி வழிகாட்டல்!
40 வயதைக் கடந்துவிட்டீர்களா? உங்கள் சேமிப்பு, முதலீடு, எதிர்கால நிதித் தேவைகளைச் சரியாகத் திட்டமிடுகிறீர்களா?
புத்தாண்டில் உங்களைப் பணக்காரர் ஆக்கும் நிதிப் பழக்கங்கள் என்னென்ன? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் நீண்டகாலத்தில் செல்வம் சேர்ப்பது எப்படி?
இவை குறித்து அடிப்படையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்!
சிறப்பு ஆன்லைன் வகுப்பு
நாள்: நவம்பர் 29, 2026, ஞாயிறு
⏰ நேரம்: காலை 11:00 – 12:30 மணி (IST)
️ பேசுபவர்கள்: டீம் லாபம்
இன்றே இலவசமாகப் பதிவு செய்யுங்கள்!
உங்கள் நிதி எதிர்காலத்திற்கான முதல் படியை இன்றே எடுங்கள். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-nov29-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov29_2026
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)