பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் தங்கமயில் ஜூவல்லரியின் புதிய கிளைகள்! - திறப்பு விழா சலுகைகள் என்ன?

Jun 10, 2026 - 18:32
0
பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் தங்கமயில் ஜூவல்லரியின் புதிய கிளைகள்! - திறப்பு விழா சலுகைகள் என்ன?

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜூவல்லரி, கடந்த 34 ஆண்டுகளாக நகை விற்பனைத் துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்று, 45 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும் 66 கிளைகளுடன் சேவையாற்றி வருகிறது.

இந்நிறுவனம் தனது புதிய கிளைகளை சென்னை பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் ஜூன் 7, 2026 அன்று திறந்து வைத்துள்ளது. புதிய ஷோரூம்களில் நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக Bridal Store அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Thangamayil Jewellery - New Branch
Thangamayil Jewellery - New Branch

மேலும், 'தங்க மாங்கல்யம்' என்ற தனித்துவமான திருமண நகை Collection-மும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மணமகள்களுக்கான தங்க, வைர மற்றும் ரத்தினக்கற்கள் பதித்த ஆபரணங்கள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு திருமண நகை வடிவமைப்புகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத அளவிலான திருமண நகை Collections மற்றும் Bridal Sets-களை தங்கமயில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், “தரமான சேவை, நியாயமான விலை மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களது வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து வருகிறது.

சென்னை பல்லாவரம் மற்றும் நீலாங்கரை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய ஷோரூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன உள்கட்டமைப்பு, விரிவான பார்கிங் வசதி மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.

திறப்பு விழா சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன். இந்த சிறப்பு சலுகைகள் ஜூன் 14, 2026 வரை மட்டுமே வழங்கப்படும்.
Thangamayil Jewellery - New Branch
Thangamayil Jewellery - New Branch

திறப்பு விழா சிறப்பு சலுகைகள்

செயின்களுக்கு சேதாரம் 1.99% முதல் 5.99% வரை.

மற்ற தங்க நகைகளுக்கு சேதாரம் 7.99% முதல் 13.99% வரை.

7 Carat-க்கு மேற்பட்ட Belgium Cut வைர நகைகள். வாங்குபவர்களுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி.

வெள்ளி நகைகளுக்கு கிலோவுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி.

Silver Jewellery மற்றும் Gift Articles-க்கு 10% முதல் 50% வரை தள்ளுபடி.

Platinum, Ruby, Emerald மற்றும் Rose Gold நகைகளுக்கு சேதாரத்தில் 50% தள்ளுபடி.

ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கி Savings Scheme-ல் இணையும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User