'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' - ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?

Nov 05, 2026 - 09:31
0
'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' - ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?

போர் தொடங்கியதும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான்.

கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியது. ஏற்கெனவே தடைகளால் பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்து வந்த ஈரான், இரு நாடுகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது.

ஆனால், ஹார்முஸ் மூடப்பட்டதால் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி உலக நாடுகளே கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரானுக்குச் சொந்தமா?

ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாகவே அமைந்த ஒரு நீர்ச்சந்தி ஆகும். இதனால், இந்த நீர்ச்சந்தியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

சர்வதேச சட்டத்தின்படி, ஹார்முஸ் நீர்ச்சந்தி அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நீர்ச்சந்தி. இதை யாரும் மூடவும் கூடாது... மூடவும் முடியாது. இந்த நீர்ச்சந்தியில் பயணிக்க எந்த நாடும் கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

ஈரான் எல்லையில் இந்த நீர்ச்சந்தி பரந்திருப்பதால், நீண்ட காலமாகவே தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த நீர்ச்சந்தியை வைத்திருந்தது அந்த நாடு. ஆனால், இந்தக் கட்டுப்பாட்டை யாரும் அங்கீகரிக்கவில்லை.

அவ்வப்போது இந்த நீர்ச்சந்தி திறக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகளுடன்தான் திறக்கப்பட்டது. சில கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இது மீறப்பட்டால், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.

இந்தியா
இந்தியா

இந்தியாவிற்கு அனுமதி

இந்த நிலையில், ஈரானின் மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) தகவலின்படி, இந்தியா, சீனா, கத்தார் மற்றும் ஈராக் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே பயணிக்க முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி பரஸ்பர நலன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று ஈரான் கூறியுள்ளது.

மேலும், இந்தப் போக்குவரத்திற்கு இந்தியா மற்றும் சீனக் கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கத்தார் கப்பல்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியக் கப்பல் அனுமதி ஈரானுக்கு மருத்துவ இறக்குமதிகளில் உதவிக்காகவும், சீனக் கப்பலின் அனுமதி அரசியல் ஆதரவிற்காகவும் செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User