"அங்கு மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் சவாலாக இருந்தது!" - ராதிகா ஆப்தே

Nov 04, 2026 - 22:00
0
"அங்கு மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் சவாலாக இருந்தது!" - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த 'அக்கா' வெப் சீரிஸ் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

இப்படத்திற்காக அளித்த புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தனக்குப் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

ராதிகா ஆப்தே | Radhika Apte
ராதிகா ஆப்தே | Radhika Apte

அவர், "நான் நடித்ததிலேயே மிகவும் கடினமான, எனக்கு முற்றிலும் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் என்றால் அது ஒரு தெலுங்குப் படம்தான்.

அதில் என்னை விட மிக மூத்த வயதுடைய நடிகருக்கு ஜோடியாக, சொந்தத் தாய்மாமனையே திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாக நடிக்க வேண்டியிருந்தது.

அந்த அனுபவத்தில் இருந்த எல்லாமே எனக்கு வெறுப்பாகத்தான் இருந்தது.

ராதிகா ஆப்தே | Radhika Apte
ராதிகா ஆப்தே | Radhika Apte

அங்கு நிலவிய அந்த ஆணாதிக்கச் சூழலும், என்னை விட வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது.

அதோடு, படத்தின் பாதியிலேயே என் கதாபாத்திரம் இறந்துவிடும். அந்த மூத்த நடிகர் என்னைத் தோளில் தூக்கி வீசிவிட்டுச் சண்டைக் காட்சி நடிக்க வேண்டும். 'நான் எப்போதுதான் இறந்து தொலைவேனோ' என்று யோசித்து நொந்துபோனேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

ராதிகா ஆப்தே, 'லயன்', 'லெஜெண்ட்', 'ரத்த சரித்திரா' உள்ளிட்ட தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User