உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

May 15, 2026 - 15:32
0
உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை வழக்கம்போல் தான் விடிந்தது.ஆனால் மற்றகாரியங்களெல்லாம் மந்தமாகவே நடந்தன. அந்த வளாகத்தில் ஏதோ ஒரு அசாதாரணமானஅமைதி குடி வந்தாற்போலிருந்தது.இதற்கும் மற்றவர்களெல்லாம் நார்மலாகத்தான் இருந்தார்கள். 

    ஹவுஸ்ஓனர் புளோயர் மூலம் மரத்தடிகளின் கீழ் போர்வையாகி கிடந்த இலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.பாயம்மா பேத்தியுடன் வாக்குவாதம்  அவரது கணவரின் மெதுவான      நடைப்பயணம்  மேல்வீட்டு ஹோட்டல்காரம் மாவின் சென்னையிலிருக்கும் மகளுடனான அலைபேசி உரையாடல் எல்லாம் சகஜமே.

ஆனாலும் ஏதோ வித்தியாசம் இருந்தது உண்மை. 

கரோலின் வீட்டில் சர்ச்சுக்கும் டீக்கடைக்காரர் வீட்டில் ஊருக்கும் கிளம்பிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.தலைக்கு குளிக்க வைக்கும் போது நிகழும் தன்வியின் அழுகுரல் பலமாகக் கேட்டது. தன்வி அழுவதை தடுக்கச் செல்ல வேண்டுமென்று நறுவி அடம் பிடிப்பதும் தெரிந்தது. இருந்தும் ஏதோ உறுத்தியது.

       செம்பா ,குண்டுமணி, சிட்டு,மொன்ன மூக்கி , நீளவாலி,குட்டிமணி,குயிலி,பீலிகா (செல்லப்பெயர்கள்) இவர்களின் குரலோ நடமாட்டமோ இல்லை.

           வராண்டா  துடைக்கவந்த  அம்மிணி 'என்னாச்சு இவங்களுக்கு  யார் சத்தத்தையும் காணோமே வழக்கமாக மரத்தடியில் கிடக்கும் பழங்களையும் காணோம் .என்னவோ ஆயிருக்கும் போல இன்னைக்கு?' என்றாள் .

      ' எனக்கும் தெரியலை. விடியற்காலையில்  எல்லாரையும் ஒண்ணாத்தான் பார்த்தேன்.  தனித்தனியாக முறைச்சிகிட்டு இருப்பாங்க வழக்கமாக. ஆனா எல்லாரும்  காலாவைப்

பத்தி பேசிகிட்டு  இருந்தாங்க.ஆனால் கவலை தெரிந்தது முகங்களில். என்னன்னு தெரியலை' என்றார் அம்மணியின் கணவர்.

      'காலாவைத்தான் இவர்களுக்குப் பிடிக்காதே.

பார்த்தவுடன் பயந்து சாவார்களே .இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற. சந்தோக்ஷமா இருக்கிறதை விட்டுட்டு இதுங்களுக்கு வேற வேலை இல்லே 'சலித்துக்கொண்டே சொன்னாள் அம்மணி.

'ஆமாம்மா நானும் கவனிச்சேன் இந்த அமைதி என்னவோ மாதிரியிருக்கும்மா யாரும் சாப்பிடக்கூட இல்லையாம். இப்பத்தான் பாத்திமா கூட சொல்லிச்சி ஆனா யாரும் எதுவும்‌சொல்ல மாட்டேங்குறாங்க' இது பாயம்மா.

இதன்பிறகு அவரவர் வேலையில் எல்லோரும் மூழ்கி விட்டனர். வெளியில் யாருமில்லை. மதிய வேளைக்குப் பின் வீட்டிற்கு வந்த நண்பர்கள் இருவர் 'என்ணண்ணா உங்க காம்பவுண்டுலே ஏதாவது விக்ஷேசமா 'எனக் கேட்டனர்.'ஒன்றுமில்லையே ஏன் ?'என வினவ 'வெளியில் வந்து பாருங்க தெரியும்.நாங்களே அவங்களைப் பார்த்துத்தான் வந்தோம்' என்றனர்.

வெளியில் வந்து பார்த்த நாங்கள் ஆச்சரியப்பட்டு வளாகத்திலிருந்த மற்றவர்களையும் கூப்பிட்டோம். நாங்கள் யாரைப் பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருந்தோமோஅந்த வாண்டுகளெல்லாம் காம்பவுண்டின்ஓரமிருந்த கார் ஸெட்டின் மேல் கிழக்குப் பார்த்து எங்களுக்குப் புறஙகாட்டியபடி இருந்தனர்.

பதறியபடி அருகில் சென்றால் எல்லா வாண்டுகளின் முகத்தில் தெரிந்தது பதட்டத்துடன் கூடிய கவலையும் கண்ணீரும் தான். காம்பவுண்டுக்கு வெளியில்‌சென்று பார்த்தோம். குப்பை மேட்டில் காலாவின் உயிரற்ற உடல் கிடந்தது.

'என்னதான் காலாவின் மேல் உயிர்ப்பயமும் பகையும் இருந்தாலும் வாண்டுகளின் அன்பும் நட்பும் சூப்பரில்லே.மனுசங்களை விட சூப்பரோ சூப்பர்.' பாத்திமா சொன்னது எல்லோரையும். சிந்திக்கவைத்தது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User