ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

Aug 02, 2026 - 10:30
0
ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மோடியின் மன்னிப்பு

அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாடும் உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன்.

எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.

நமது மகள்கள் இது போன்ற மொழியைப் பேசுவது ஒரு கலாசார அதிர்ச்சியைத் தருகிறது.

நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகம் எனது இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மோடி
மோடி

அபிஜித் தீப்கே பேச்சு

பிரதமர் மோடியின் வீடியோவிற்கு எதிர்வினையாற்றும் விதமாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "நேற்று மோடி அவர்களின் வீடியோவை நாம் அனைவரும் பார்த்தோம். அதில் அவர் குழந்தைகளைத் தான் மன்னிப்பதாகக் கூறியிருந்தார்.

சிறுமிகளை...

இன்றிரவும் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிடுவார் என்று நான் கருதுகிறேன். அந்த வீடியோவில் அவர் மன்னிப்பு கேட்பார் என்று நான் நம்புகிறேன்.

குறிப்பாக, ஜூலை 20-ஆம் தேதி நடந்த தடியடிக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

12 வயது சிறுமிகளின் தலைகளைக் கூட காவல்துறை உடைத்துள்ளது.

ஜந்தர் மந்தர் CJP போராட்டம்
ஜந்தர் மந்தர் CJP போராட்டம்

மன்னிப்பு கேட்க வேண்டும்

பெண் பிள்ளைகளின் ஆடைகளை ஆண் காவல்துறை அதிகாரிகள் கிழித்ததோடு, அவர்களைக் கொடூரமாக அடித்துள்ளனர்.

அவர்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.

எனவே, காவல்துறையினரால் இவ்வளவு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அந்தச் சிறுமிகள் அனைவரிடமும் மோடி அவர்கள் இன்றிரவு வீடியோவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User