Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எலும்புகள் பலவீனமாவதை எப்படித் தடுப்பது?

Jul 26, 2026 - 07:32
0
Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எலும்புகள் பலவீனமாவதை எப்படித் தடுப்பது?

Doctor Vikatan: என் வயது 50.  பொதுவாகவே இந்த வயதுக்குப் பிறகு, குறிப்பாக பெண்களுக்கு எலும்புகள் பலவீனமாகும், எளிதில் உடையும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எலும்புகள் பலவீனமடைவதைத்  தடுக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்... என்ன மாதிரியான கால்சியம் உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி.

எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி
எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி

50 வயதிற்குப் பிறகு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். வெறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது மட்டுமே பலமான எலும்புகளைத் தந்துவிடாது. ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எலும்புகளை வலுப்படுத்த நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் முக்கியமாக, வெயிட் டிரெய்னிங் (Weight Training) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடலின் மேல்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி (கால்கள்) ஆகிய இரண்டுக்கும் வெயிட் டிரெய்னிங் பயிற்சிகள் செய்வது மிகவும் முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம் நிச்சயம் வலுவான எலும்புகளைப் பெற முடியும்.

உடலின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளுக்குத் தேவையான எடைப் பயிற்சிகளைச் செய்வதுடன், சரியான புரச்சத்து உணவு (Protein Diet) உட்கொள்ள வேண்டியதும் மிக முக்கியம். 50 வயதுக்குப் பிறகு அதிக அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

50 வயதுக்குப் பிறகு அதிக அளவு புரதச்சத்து (Protein) எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

போதுமான சூரிய ஒளி (Sun Exposure) படுவதும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே, தினமும் உடலுக்குத் தேவையான அளவு சூரிய ஒளி படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

இந்த மூன்று விஷயங்களையும் சரியாகப் பின்பற்றி வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புப் புரை நோயை (Osteoporosis) நிச்சயம் தடுக்க முடியும். எலும்புப்புரை நோய் வந்தால், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாகிவிடும். லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்புகள் உடையலாம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User