மறைந்த நடிகர் நானா படேகர் உடல் இரவில் அரசு மரியாதையுடன் புனே பண்ணை வீட்டில் தகனம்

Oct 09, 2026 - 10:00
0
மறைந்த நடிகர் நானா படேகர் உடல் இரவில் அரசு மரியாதையுடன் புனே பண்ணை வீட்டில் தகனம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் மருத்துவ நடைமுறைக்கு பிறகு புனே அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான டோஞ்சேயில் இருக்கும் அவரது பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. புனே விமான நிலையம் கொண்டு வரப்பட்டபோது அங்கு இருந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நானா படேகர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் டோஞ்சேவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நடிகர் ஜாக்கி ஷெராப் டோஞ்சே கிராமத்திற்கு வந்திருந்திருந்து நானாபடேகருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாலிவுட் பிரமுகர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் நானாபடேகர் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து நானாபடேகர் உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகள் நேற்று இரவு நடந்தது.

புனே விமான நிலையம்

இறுதிச் சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக நானாபடேகருக்கு முழு அரசு மரியாதைகள் அளிக்கப்பட்டன. அவரது குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், சக கலைஞர்கள் மற்றும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த டோஞ்சே பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களின் முன்னிலையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் (சிதைக்குத் தீ மூட்டுதல்) நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்தி மற்றும் மராத்தித் திரையுலகில் அவர் விட்டுச் சென்ற சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மூலம் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு மரியாதை செலுத்தினர். இரவில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது குறித்து நானா படேகர் மகன் மல்ஹர் படேகர் கூறுகையில்,''அதிகாலையில் இறந்ததால் இன்றே இறுதிச்சடங்கை நடத்திவிட முடிவு செய்தோம். எனது தந்தை முன்னெடுத்துச்சென்ற விவசாயிகளுக்கான பணியை நான் தொடர்ந்து செய்வேன்'' என்று தெரிவித்தார்.

அமிதாப்பச்சன் இரங்கல்

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மேடையில், மறைந்த நடிகர் நானா படேகருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தினார். வெள்ளை நிற ஆடை அணிந்து வந்திருந்த அமிதாப், வியாழக்கிழமை நிகழ்ச்சியைத் தொடங்கும்போது, ​​திரைப்படத் துறை மட்டுமின்றி, தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனைவரின் மீதும் நானாபடேகர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை நினைவுகூர்ந்தார். "நானா, உங்களுக்கு எனது தனிப்பட்ட வணக்கங்கள்," என்று அவர் கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் நானா படேகர் பங்கேற்றதையும் நினைவு கூர்ந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User