`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

Nov 23, 2026 - 16:00
0
`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி, ``மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.  உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது.

அதேபோல காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. வரும் 2028 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் வெற்றிபெறுவதற்காக அந்த மாநிலத்தின் அரசியல்வாதிகள் வரிந்துகட்டிக் கொண்டு பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு செங்கல்லைக்கூட கட்ட முடியாது. கடைமடை மாநிலங்களின் அனுமதி இல்லாமல், முதல்மடை மாநிலம் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் உலக நியதி.

மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்காவிட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும். தமிழகத்தில் முன்பு 15 லட்சமாக இருந்த அரசுப் பணியிடங்கள் தற்போது 8 லட்சமாக மாறிவிட்டது. அனைத்துப் பணியிடங்களும் காண்டிராக்ட் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் எங்கு தொழிற்சாலையைத் தொடங்கினாலும், உள்ளூர் மக்களுக்கு 80% வேலை வாய்ப்பை வழங்குவதை சட்டமாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பா.ம.க ஆட்சி அமைந்தால் ஆறு மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்க்க முடியும். அரசியல் அனுபவமும், நிர்வாக அனுபவமும் நமக்கு அதிகமாக இருக்கிறது. தமிழக மக்கள் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். அதனடிப்படையில் நமக்கும் வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User