100 அடி நீளம், ரூ.1 கோடி மதிப்பு; 500 ரூபாய் நோட்டு மாலைகளை மணமகன்களுக்கு அணிவித்த மைத்துனர்

Nov 24, 2026 - 12:30
0
100 அடி நீளம், ரூ.1 கோடி மதிப்பு; 500 ரூபாய் நோட்டு மாலைகளை மணமகன்களுக்கு அணிவித்த மைத்துனர்

திருமணத்தில் மணமக்கள் விலை உயர்ந்த ஆடைகள் அணிவது வழக்கமான ஒன்றுதான். அதேபோன்று திருமண விருந்தில் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிக்க பலவகையான சாப்பாடு போட்டு விருந்தினர்களை திக்குமுக்காட வைப்பதும் வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் மணமகன்கள் இரண்டு பேரையும் அவர்களது மைத்துனர் பணமழையால் திக்குமுக்காட செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா அருகில் உள்ள நாக்லா ஃபோண்டா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யோகேந்திர சிங்கின் மகன் பிரசாந்த் மற்றும் குஷால்பால் மகன் கன்ஹா ராகவ் ஆகிய இருவருக்கும் முட்செராஸ் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் கோவர்தனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்தன. திருமணத்திற்கு முன்பாக நடக்கும் பாரம்பரிய விழாவின் போது, மணமகன்களின் மைத்துனர் பூரா தாக்கூர் இரண்டு மாப்பிள்ளைகளுக்கும் கொடுத்த பரிசை கண்டு மாப்பிள்ளைகள் மட்டுமல்லாது, திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கமான் பகுதியில் உள்ள நந்தோலா கிராமத்தைச் சேர்ந்த பூரா தாக்கூர், ஒவ்வொரு மணமகனுக்கும் 500 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலையை அணிவித்தார். அந்த மாலைகள் ஒவ்வொன்றும் சுமார் 100 அடி நீளம் கொண்டதாகவும், அதில் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள கரன்சி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவற்றின் பிரம்மாண்டமான நீளம் மற்றும் எடையைக் கருத்தில் கொண்டு, விருந்தினர்கள் அந்த மாலை தரையில் படாதவாறு தங்களது கையில் பிடித்துக்கொண்டு நின்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

மாலை அதிக உயரமாக இருந்ததால் மாப்பிள்ளைகள் இருவருக்கும் மாலையை அணிய மேடை ஒன்றின் மீது அவர்கள் நிற்க வைக்கப்பட்டனர். இரண்டு மணமகன்களும் பல கோடி மதிப்புள்ள மாலைகளை அணிந்து சென்றது தற்போது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது, இந்த வீடியோக்கள் ஆன்லைனில் கணிசமான ஆர்வத்தை உருவாக்குகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User