Vijay Sethupathi: "இது திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்" - எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி

Nov 24, 2026 - 21:30
0
Vijay Sethupathi: "இது திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்" - எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி

தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் விருது வழங்கும் பிரசண்டராகப் பங்கேற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் எம்மி விருது விழாவுக்கு விருது வழங்குபவராகச் சென்றிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, "சர்வதேச எம்மி விருது விழாவில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல் முறை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையிலேயே பெருமையாகவும் சிறப்பாகவும் உணர வைக்கிறது. இதற்கு முன்பும் நான் நியூயார்க் வந்திருக்கிறேன்.

ஆனால், இந்த முறை வருவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் அல்ல. திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்" என்றார்.

'மகாராஜா' திரைப்படத்தின் ஆங்கில ரீமேக்கில் நடிக்கவுள்ள ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகேயை இங்குச் சந்திப்பீர்களா எனக் கேட்டதற்கு, "நான் இங்கு விருது வழங்கும் பிரசண்டராக மட்டுமே வந்திருப்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை" எனப் பதிலளித்தார்.

Vijay Sethupathi - Emmy Awards
Vijay Sethupathi - Emmy Awards

இதைத் தாண்டி மிஷ்கின் இயக்கத்தில் 'ட்ரெயின்', வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்', மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் 'இஞ்சி வெல்லம்', பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 'ஸ்லம் டாக்', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதியின் கைகளில் உள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User