ஜப்பானிய பெண்ணைக் கரம்பிடித்த ஈரோட்டு இளைஞர்; சென்னிமலையில் பாரம்பர்ய முறைப்படி நடைபெற்ற திருமணம்!

Nov 23, 2026 - 16:00
0
ஜப்பானிய பெண்ணைக் கரம்பிடித்த ஈரோட்டு இளைஞர்; சென்னிமலையில் பாரம்பர்ய முறைப்படி நடைபெற்ற திருமணம்!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் உள்ள முருங்கத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார். மென்பொருள் பொறியாளரான இவர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹரூமி இஷிசுகா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மணமகள் ஹரூமி இஷிசுகா தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பர்ய வழக்கங்களின் மீது ஈடுபாடு மிக்கவராக இருந்துள்ளார். இதனால், தனது திருமணத்தை தமிழ்நாட்டு முறைப்படியே நடத்த வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

ஜப்பான் இளம்பெண்ணைக் கரம்பிடித்த ஈரோடு இளைஞர்

மணமகளின் ஆசைப்படி, ஜப்பானில் இருந்து அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சென்னிமலைக்கு வருகைத் தந்துள்ளனர். பட்டுச்சேலை, மல்லிகைப்பூ, பாரம்பர்ய நகைகள் அணிந்து நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜப்பானில் இருந்து வந்திருந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி-சட்டை மற்றும் சேலை அணிந்து கொண்டு திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னிமலையில் நடைபெற்ற ஜப்பான் நாட்டு பெண்ணின் திருமணம் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User