குருப்பெயர்ச்சி 2026: `பத்தில் குரு பதவிக்கு ஆபத்து வருமே’ என பதற்றம் வேண்டாம்' துலாம் ராசி பலன்கள்!
உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல் 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். `பத்தில் குரு பதவிக்கு ஆபத்து வருமே’ என்று பதற்றம் வேண்டாம். திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டால் போதும்; எல்லா சூழலையும் சாதகமாக்கிக்கொள்ளலாம்.
1. இந்தக் காலக்கட்டத்தில் குரு பார்வை நல்ல பலன்களைத் தரும். கடகத்தில் உச்ச குருவாக அமர்ந்து உங்கள் ராசிக்கு 2, 4 மற்றும் 6-ம் இடத்தைப் பார்க்கிறார் குரு பகவான்.
2. இனிமையாகப் பேசி எந்த காரியத்தையும் செய்துமுடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தைத் தவிர்த்துவிடுங்கள்.
3. குருபகவான், சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வீடு வாங்குவதற்கு வங்கியில் வீட்டுக்கடன் பெற விண்ணப்பம் செய்திருந்தால், நல்ல பதில் கிடைக்கும்.
4. குருபார்வை 6-ல் விழுவதால் பழைய கடனை பைசல் செய்யும் அளவிற்குப் பணம் வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். எனினும், பழைய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். வேலைகளைத் தேங்க விடாதீர்கள்.
5. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போங்கள். யாருக்காகவும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். வங்கி லோன் தொடர்பாக எவருக்கும் பரிந்துரை கையொப்பம் போடவேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும்.

6. வெளிவட்டாரத்தில் நிம்மதி உண்டு. எனினும், ஏதேனும் பதவிகள், பொறுப்புகள் தேடி வந்தால், சற்று யோசித்து முடிவெடுங்கள். ஒரு வேலையை நான்கைந்து முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.
7. எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிட்டும்.
8. உங்களின் தைரிய - சஷ்டமாதிபதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில், 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் செலவுகள், அலைச்சல் இருக்கும். பணம் விஷயத்தில் கறாராக இருங்கள்.
9. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் வீடு, சொத்து வாங்க வாய்ப்புகள் உண்டு. வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பூர்விகச்சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரையிலும் கேதுவின் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனக்கவலைகள் தீரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்.
10. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். சிலர், கடையை விரிவுபடுத்துவீர்கள். அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு, பெரிய முதலீடுகளைப் போடவேண்டாம். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபம் உண்டு.
11. உத்தியோகத்தில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். கணினித் துறையினர், மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறைகூற வேண்டாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)