இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல்

Nov 01, 2026 - 08:00
0
இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நேற்று (அக்.31) இந்தியா கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்கு வெளியே உள்ள காலியிடத்தில் இந்த மாதிரி நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றது.

மாதிரி நாடாளுமன்றம்
மாதிரி நாடாளுமன்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில், மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழிநடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

81 வயதான மீரா குமார், கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவையில் உறுப்பினர்கள் பேசும்போது நேரத்தைப் பின்பற்றச் செய்வது, விதிமுறைகளை மதிக்க வைப்பது, அதே நேரத்தில் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றில் தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கியிருந்தார்.

மீரா குமார்
மீரா குமார்

அந்தப் பழைய பாணியையே டெல்லியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, தனது பழைய கம்பீரமான குரலில் உறுப்பினர்களை வழிநடத்தியக் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User