Anupama Parameswaran: "அப்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது!" - அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மரீசிக்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் அவர், "நான் எதற்காகவெல்லாம் முன்பு குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேனோ, அதே விஷயங்களை மற்றவர்கள் செய்யும்போது எப்படி இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது?
சில நேரங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. அதைச் செய்ய யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மையான விஷயம் என்பதை இது புரிய வைக்கிறது.
கதாபாத்திரங்கள் மாறும்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது.

மேலும், சமூக வலைத்தளப் பக்கத்தில் மக்களுடன் உரையாடுவதை நான் எப்போதுமே விரும்புகிறேன். இது பல ஆண்டுகளாக நான் செய்து வரும் ஒரு விஷயமே தவிர, நேற்று புதிதாகக் கண்டறிந்த ஒன்றல்ல.
நான் தொடர்ந்து உண்மையாகவும் நிலையான முறையிலும் இதையெல்லாம் செய்வேன். ஆனால், அதை எனது சொந்த அமைதியை இழந்து செய்ய மாட்டேன்.
அன்பும் நன்றியுணர்வும் உண்மையானவையாக இருக்க, அவை எப்போதும் இணையத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமில்லை." எனப் பதிவிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)