Gold: தங்கம் விலை உயர்வு: காரணம் என்ன? இந்தியாவில் இன்னும் விலை ஏறுமா?

Aug 20, 2026 - 20:00
0
Gold: தங்கம் விலை உயர்வு: காரணம் என்ன? இந்தியாவில் இன்னும் விலை ஏறுமா?

சர்வதேச சந்தையிலும் சரி... இந்திய சந்தையிலும் சரி... தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

> இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்துத் தீபாவளி வரை அடுத்தடுத்துப் பண்டிகைகள்தான்.

இதனால், இந்தியாவில் அடுத்தடுத்துத் தங்கம் விலை ஏறுவதை எதிர்பார்க்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

> சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்விற்கான காரணம் முக்கியமாக - அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிதான்.

அடுத்த மாதம் இந்த வங்கியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தங்கம்
தங்கம்

பொதுவாக, வட்டி விகிதம் உயரும்போது, தங்கம் விலை குறையும். இதனால், வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் விலை குறையலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தை சரியாக இல்லை. இந்த நேரத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்று கணிக்கப்படுகிறது.

இதனால், தங்கத்தின் பக்கம் முதலீடுகள் கூடுகின்றன. ஆகையால், தங்கம் விலை அதிகரிக்கிறது.

> அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இல்லை. இதனாலும், தங்கம் விலை உயர்கிறது.

உலக வங்கிகள் தற்போது தங்கம் வாங்கிக் குவித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கித் தொடர்ந்து நகர்கிறது.

ஈரான் போரினால் நினைத்த அளவிற்குப் பணவீக்கம் உயரவில்லை. இதுவும் தங்கம் விலை உயர்விற்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

முரண்!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இப்போது மாறாக, கச்சா எண்ணெய் விலையும் உயர்கிறது... தங்கம் விலையும் உயர்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User