"நாங்கள் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதே தமிழகத்திற்காக தான்" - கர்நாடகா முதல்வரின் 'ட்விஸ்ட்' பதில்

Aug 20, 2026 - 20:00
0
"நாங்கள் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதே தமிழகத்திற்காக தான்" - கர்நாடகா முதல்வரின் 'ட்விஸ்ட்' பதில்

கர்நாடகா முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றதும் அவர் மிகவும் வேகம் காட்டிய ஒன்று - காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதாகும்.

இதற்குத் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.... எதிர்ப்புகள் இன்னும் இருந்து வருகின்றன.இந்த நிலையில், இன்று நடந்த ‘தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில்’ டி.கே.சிவக்குமார் கலந்துகொண்டார்.

மாநாட்டிற்குப் பிறகு, பத்திரிகையாளர்கள் அவரிடம் அணை கட்டுவது குறித்துக் கேள்வி கேட்டனர்.அந்தக் கேள்விக்கு, “மத்திய உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் தமிழகத்திற்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளேன்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

மேக்கேதாட்டு அணையில் எவ்வளவு நீர் இருந்தாலும், குடிநீருக்கான 5 டி.எம்.சி (TMC) தண்ணீரைத் தவிர்த்து, மீதமுள்ள அத்தனை நீரும் மேக்கேதாட்டு அணையிலிருந்து தமிழகத்திற்கே விட்டுத்தரப்படும்.

எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் நிம்மதியாக இருக்கலாம். இந்த அணை உங்களுக்காக மட்டுமே கட்டப்படுகிறதே தவிர, எங்களுக்காக அல்ல” என்று பேசியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User