சாலைகள் வேண்டும்... ஆனால் நிலம் தர மாட்டோம்! – வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது நாமும்தானா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நம் இந்திய நாடு வல்லரசை நோக்கி வலுவான பயணம் மேற்கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது. கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.தேனும்,பாலெல்லாம்கூட ஓட வேண்டாம்.அடைபட்டுக் கிடக்கின்ற ஆறுகளில்,நக்கிக் குடிக்கும் நாய்களின் வாய்க்கு எட்டுகின்ற வரையிலாவது தண்ணீர் வந்தாலே போதும். இல்லையே!அது கூட வரவில்லையே!என்ன காரணம்?
ஆட்சி அதிகாரத்தில் சிறு குறையைக் கண்டாலும் பிரதமரை, முதலமைச்சரைக் குறை கூறுகிறோம். எங்கோ ஒரு மூலைக் கிராமத்தில் நடக்கும் வேண்டாத நிகழ்ச்சிகளுடன் அவர்களைத் தொடர்பு படுத்தி, சோஷியல் மீடியாவில் கண்டனக் குரல் எழுப்புகிறோம்.
அதிகார வர்க்கத்தில் சில கருப்பு ஆடுகள் இருப்பதை மனதில் ஏற்றிக் கொண்டு, உண்மையாக உழைக்கும் அதிகாரிகளையும் உரிய விதத்தில் புரிந்து கொள்ளாமல், எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறோம்.
எந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் உடனடி எதிர்ப்பு!எதிர்ப்பு…எதிர்ப்பு…
எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு!அறிவிக்கப்பட்ட திட்டங்களின் சாதக,பாதகங்கள் தெரிவதற்கு முன்பாகவே ‘வேண்டாம்’ என்ற கோஷம்.
‘எங்களூருக்கு ரயில் போக்குவரத்தும்,ரயில்வே ஸ்டேஷனும் வேண்டும்’என்று கோரிக்கை வைக்கும் எந்தக் கிராமத்தினரும்,ஸ்டேஷன் கட்ட இடமோ,தண்ட வாளங்கள் பதிக்க இடமோ தரத் தயாராக இல்லை. ஆனாலும் அவர்களுக்கு ரயில் மட்டும் வேண்டும்!
ஏஐ பறக்கும் ரயில்களைக் கண்டு பிடித்தால்,ஒரு வேளை அது சாத்தியமாகலாம்.அப்பொழுதும் எங்கள் நிலங்களின் மீது எப்படிப் பறக்கலாம்?என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும்.
அடுத்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் மிகச் சிறந்த விமான நிலையத்தை அமைத்து விட்டார்கள்.அந்த நாளிலேயே இந்தியாவின் நான்கு மெட்ரோபாலிடன் சிட்டிகளில் ஒன்றாகிய மெட்ராசில்,அதாவது நம் சென்னையில்,
பரந்தூர் விமான நிலையக் கூத்தை நாம் கண்கூடாகக் கண்டோம். அதில் கண்ட இரட்டைத் தொல்லை என்னவென்றால், விமான நிலையமும் அமையவில்லை; விவசாயிகளும் பயன்பெறவில்லை.
நீண்ட,நேர்த்தியான சாலைகள் வேண்டுமென்று ஆண்டுக் கணக்கில் போராடுவோம். அரசு அதனைக் கருத்தில் கொண்டு நிலத்தை அளக்க வந்தால், கறுப்புக் கொடியுடன் காத்து நிற்கிறோம்.
மின்சாரம் வேண்டும்,தொழிற்சாலைகள் வேண்டும்,தொலைத் தொடர்பு வசதிகள் நொடியும் தாமதமில்லாமல் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் போராடுகின்ற நாம்,
மின் கம்பம் நடக்கூட இடந்தர மாட்டோம்;தொழில் அரங்குகள் கட்ட இடந்தர மாட்டோம்;தொலைத் தொடர்பு கோபுரங்கள் கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்தில் அமைக்கக் கூட இடந்தர மாட்டோம் என்றெல்லாம் வம்பு செய்தால், வளர்ச்சி எங்கிருந்து வரும்?
மூன்றாவது வரியில், அடைபட்டுக் கிடக்கின்ற ஆறுகள் என்று நான் எழுதியுள்ள
தற்குக் காரணம் உண்டு.ஏனெனில் பல ஆறுகள் தக்க விதத்தில் தூர் வாரப் படாமலும்,தகுந்த பராமரிப்பும் இன்றி பாழ்பட்டுப் போய்க் கிடக்கின்றன.
ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த டெல்டா விவசாயிகள்,ஒவ்வோர் ஆண்டும் குடி மராமத்து மூலம் தங்கள் நீர் ஆதாரங்களைத் தாங்களாகவே செப்பனிட்டுக் கொண்டார்கள்.அரசாங்கத்தையோ,அதிகாரிகளையோ எதிர்பார்த்து அவர்கள் காத்து நின்றதில்லை!கடைமடை வரை நீரும், அவர்களைக் காக்க வைக்காமல் வந்து கொண்டிருந்தது.இன்றைக்கோ,மேட்டூரில் நீர் திறந்த பிறகுதான் தங்கள் ஆறுகள், வாய்க்கால்கள்,சரியாகத் தூர் வாரப்படவில்லை என்று அங்கலாய்க்கி றார்கள்.ஏதோ அது வரை அவர்கள் வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து விட்டு,நீர் திறந்ததும் ஊருக்கு வந்ததைப்போல!

மக்கள் நினைத்தால் இரண்டினைச் செய்ய முடியும்.ஒன்று,செயல்களை நிகழ்த்திக் காட்டுவது.மற்றொன்று செயல்படாமல் தடுத்து வைப்பது.மகாத்மா காந்தி காலத்தில் ஒத்துழையாமை இயக்கம் இருந்தது.அப்பொழுது ஆண்டவர்களோ, ஆங்கிலேயர்கள்.நம்மை அடிமைகளாக நினைத்து ஆட்சி செலுத்தியவர்கள்.
இப்பொழுதோ…நம்மை நாம்தான் ஆள்கிறோம்.நாம்தான் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை அவர்கள் கையில் கொடுத்துள்ளோம்.அதாவது நம் ஆட்சிதான் நடக்கிறது.இப்பொழுதும் ஒத்துழையாமை இயக்கத்தை உயர்த்திப் பிடித்தோமானால்,நாம் உயர்வது எப்போது?
ஏஐ வந்து, உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்துடன் போட்டி போடுகிறது.
பெரும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கொத்துக் கொத்தாக வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள்.நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது.
ஆனால் இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல்,எந்தத் திட்டத்திற்கும் எதிர்ப்பைக் காட்டக் கறுப்புக் கொடியுடன் சுற்றுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
எனவே,நம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பது மக்களாகிய நாமும்தான் என்பதை உணர்ந்து,நம்மை நாம் மாற்றிக் கொண்டாலே மகிழ்வான எதிர்காலத்தையும்,மகத்தான முன்னேற்றத்தையும் அடைய முடியும் என்பதை மனதில் இறுத்தி,அதற்கான முயற்சிகளில் இறங்குவோம்!நாமும் வளர்ந்து,நாட்டையும் முன்னேற்றுவோம்!
-ரெ.ஆத்மநாதன்,
புளோரிடா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)