'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

Jun 12, 2026 - 19:01
0
'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன் என்ற இந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

இத்தனை வருடங்களாக எனக்கு பக்கபலமாக இருந்த என் குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில் இருக்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேன் வில்லியம்சன் தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்திருக்கிறார் கேன் வில்லியம்சன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User