Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு...' - குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

Oct 29, 2026 - 09:00
0
Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு...' - குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அதோடு சல்மான் கானின் மும்பை பண்ணை வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சல்மான் கானின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் என்பவரையும் இக்கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் அதிக அளவில் செயல்படுகின்றனர். இது தவிர அமெரிக்கா மற்றும் கனடாவிலும் இக்கும்பல் அதிக அளவில் செயல்படுகிறது.

மும்பை உட்பட நாடு முழுவதும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது வழக்குகள் இருந்தாலும், அவனை மத்திய அரசு எந்த கோர்ட் விசாரணைக்கும் நேரடியாக அழைத்துச்செல்லாமல் குஜராத் சபர்மதி சிறையில் அடைத்து வைத்திருக்கிறது.

லாரன்ஸ் பிஷ்னோய்
லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோயிக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை இந்த அளவுக்குப் பலத்த பாதுகாப்புடன் வைத்திருக்கிறது. சமீபத்தில் மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் மிகவும் பாதுகாப்பு மிக்க வேறு ஒரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் தனி அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்து கொடுக்க சிறை நிர்வாகம் சில கைதிகளை நியமித்து இருக்கிறது.

சிறையில் உள்ள பிளாக் 200 என்ற பிரிவுக்கு லாரன்ஸ் பிஷோய் மாற்றப்பட்டுள்ளார். பிளாக் 200 என்பது சபர்மதி சிறைக்குள் இருக்கும் அதிகபட்ச பாதுகாப்புப் பகுதியாகும். இங்கு 2008 தொடர் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பிற தீவிர வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவவர்கள் சிறைக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிஷ்னோய் "தஸ் கோலி" என்ற இடத்தில் 10 கைதிகள் தங்கக்கூடிய ஒரு சிறிய உயர்-பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சபர்மதி சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு அவர் திகார் சிறையிலும், பஞ்சாபில் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.

2023-2024க்கு முன், லாரன்ஸ் பிஷ்னோய் தனது கூட்டாளிகள் மூலம் மிரட்டல் ஆடியோ அனுப்பியோ அல்லது மொபைல் போன் மூலமோ அல்லது வீடியோ பதிவுகள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் வேலையில் ஈடுபட்டு வந்தார். மேலும் பல்வேறு சிறைகளில் இருந்து பேட்டியும் கொடுத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், லாரன்ஸ் பிஷ்னோயிடமிருந்து நேரடி அழைப்பு அல்லது தகவல்தொடர்புகள் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நேரடியாக ஆஜர்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் அணுகல் இல்லாமல், பிஷ்னோய் இப்போது 24 மணி நேரமும் தனிமைக் கண்காணிப்பில் வாழ்கிறார். அவர் தனது அறைக்குள் ஒரு ஒழுக்கமான, துறவற வாழ்க்கை முறையைப் பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காலை நேரத்தைத் தியானத்தில் செலவிடுவது, தொடர்ந்து ஹனுமான் சாலிசாவைப் படிப்பது, விரதங்களைக் கடைப்பிடிப்பது மற்றும் சைவ உணவைப் சாப்பிடுவது என்று வாழ்ந்து வருகிறார்.

கோர்ட் வழக்குகளை வீடியோ கான்பெரன்ஸ் மூலம் மட்டுமே எதிர்கொள்கிறார். அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டம் உலகளவில் தொடர்ந்து செயல்படுகிறது. அவரது முக்கிய உதவியாளர்களை உள்ளடக்கிய ஒரு 'நிழல் அமைச்சரவை' அதன் அன்றாட நடவடிக்கைகளை வெளிநாட்டிலிருந்து நடத்துகிறது.

முக்கியக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்வதைத் தவிர, ஆட்சேர்ப்பு, பணி மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை செய்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User