மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

Jun 12, 2026 - 19:01
0
மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக்கிக் கொண்டுவந்து அதிக விலைக்கு தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளில் பல சோதனைச் சாவடிகள் இருந்தும் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தல் நடந்து வருகிறது.

குட்கா கடத்தல்

இந்த நிலையில், மைசூரில் இருந்து கோவைக்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக பர்கூர் அருகில் உள்ள சோதனைச் சாவடி காவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவைக்கு பூண்டு லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.

அதில், வழக்கத்துக்கு மாறாக மூட்டைகள் அடுக்கியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் பூண்டு லோடுகளில் குட்கா மூட்டைகளைப் பதுக்கி கொண்டு வந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குட்கா கடத்தல்

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "மைசூரில் இருந்து கோவைக்கு 70 மூட்டைகளில் 450 கிலோ குட்கா பொருள்களை இரண்டு நபர்கள் கடத்தி வந்துள்ளனர். பூண்டு மூட்டைகளுக்குள் வைத்து கடத்தி வந்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன உரிமையாளர் நவுசத் மற்றும் அவருடன் வந்த முபாரக் அலி ஆகிய இருவரையும் கைதுசெய்து குட்காவையும் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User