Elon Musk செலவளித்த $50 கோடி வீண்; டெக்சாஸில் தோற்ற ட்ரம்ப் கட்சி; இது Elon-க்கு பெர்சனல் பின்னடைவு

Nov 05, 2026 - 09:31
0
Elon Musk செலவளித்த $50 கோடி வீண்; டெக்சாஸில் தோற்ற ட்ரம்ப் கட்சி; இது Elon-க்கு பெர்சனல் பின்னடைவு

2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கிட்டத்தட்ட 25 கோடி டாலரைச் செலவளித்தார்.

அவருடைய இந்தச் செலவு வீணாகவில்லை. ட்ரம்ப்பே அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் நட்பு 2025-ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் மிக நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ட்ரம்ப் புதிய வரிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர, இருவரின் உறவில் விரிசல் உண்டானது.

ஆனால், சில மாதங்களாக, எலான் - ட்ரம்ப் உறவு ஓரளவு சுமுகமாகவே இருக்கிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க் செலவு

இந்த நிலையில்தான், அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று கிட்டத்தட்ட ஐம்பது கோடி டாலர்களைச் செலவழித்துள்ளார்.

இதற்கு ட்ரம்பின் நட்பு அல்ல. டெக்சாஸ்தான் எலான் மஸ்க்கின் பிசினஸ் மையம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் டெக்சாஸில்தான் உள்ளது. டெக்சாஸில்தான் எலான் மஸ்க் வசிக்கிறார். காரணம், டெக்சாஸில் பெர்சனல் வரி இல்லை.

எலான் மஸ்க் நிறுவனங்களின் சட்டப்பூர்வ தலைமையகம் டெக்சாஸில்தான் உள்ளன. இதனால், தனக்குச் சாதகமான கட்சி டெக்சாஸில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை.

டெக்சாஸில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் டெக்சாஸில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் எலான் மஸ்க்கிற்கு நிச்சயம் ஏமாற்றம்தான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User