Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வெயிட்லாஸால் ஏற்பட்ட Stretch Marks... மாறுமா, நிரந்தரமா?
Doctor Vikatan: என் மகனுக்கு வயது 20. கடந்த சில மாதங்களாக வெயிட் லாஸ் முயற்சிக்காக ஜிம் செல்கிறான். எடை குறைந்த பிறகு அவனுக்கு உடலின் பல இடங்களிலும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வந்துவிட்டது. இது நிரந்தரமாகத் தங்கிவிடுமா...
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

ஸ்ட்ரெச் மார்க்ஸில் பல வகைகள் உள்ளன. அதன் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் இருப்பது புதிய அல்லது ஆரம்பகட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஆகும். வெள்ளை நிறத்தில் இருப்பது முதிர்ந்த (Mature) ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஆகும்.
எடைக்குறைப்புக்கு (Weight loss) பிறகு ஏற்பட்டது அல்லது இப்போதுதான் வரத் தொடங்குகிறது என்றாலோ, நிறைய மாய்ஸ்ச்சரைசர் (Moisturizers) பயன்படுத்துவதன் மூலம் அதைக் கொஞ்சம் குறைக்க முடியும். இருப்பினும், இதை முற்றிலும் சரியாக்கவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
ஸ்ட்ரெச் மார்க்ஸை ஓரளவு மறைக்க சிகிச்சை முறைகள் உள்ளன.
ஸ்ட்ரெச் மார்க்கானது சிறிய அளவில் மட்டுமே இருக்கிறது, பெரிதாகத் தொந்தரவு தரவில்லை என்றால், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி மேற்கொண்டு வராமல் தடுக்க முயலலாம்.

ஒருவேளை இது உங்களுக்குத் தொந்தரவாகவோ அல்லது சங்கடமாகவோ இருந்தால், மைக்ரோ நீட்லிங் (Microneedling) மற்றும் லேசர் (Laser) சிகிச்சைகள் மூலம் சரிசெய்யலாம்.
எந்தவிதமான க்ரீம்கள் (Creams) அல்லது ஜெல்கள் (Gels) மூலமாகவும் இதை மறைய வைக்க முடியாது. அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை 100 சதகிவிதம் நீக்கிவிட முடியுமா என்றால் முடியாது. இதைத் தவிர்க்கலாமே தவிர ரிவர்ஸ் செய்ய வாய்ப்பில்லை.
டாக்டர் பூர்ணிமா:
சென்னை அண்ணாநகரில் Dr. Poornima's Clinic - House of Dermatology & Aesthetics-ன் உரிமையாளர். சருமநலத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)