ஜனநாயகன் FDFS: புதுக்கோட்டையில் கண்ணீர் விட்ட அமைச்சர் பர்வேஸ்.! | Video

Jul 23, 2026 - 14:00
0
ஜனநாயகன் FDFS: புதுக்கோட்டையில் கண்ணீர் விட்ட அமைச்சர் பர்வேஸ்.! | Video

நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்குத் திரைக்கு வந்திருக்கிறது தமிழக முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம்.

புதுக்கோட்டையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் காலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். ஆனால், புதுக்கோட்டை 'விஜய் தியேட்டரில்' நடந்த சம்பவம்தான் டாக் ஆஃப் தி டவுன்!

உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்!

திரையரங்கிற்குள் படத்தைப் பார்க்க வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸுக்கு 'தளபதி' ரசிகர்கள் கொடுத்த பலமான வரவேற்பால் அந்த ஏரியாவே ரணகளமானது.

ரசிகர்களின் ஆரவாரத்தோடு உள்ளே சென்ற அமைச்சருக்கு,ஒரு பெரிய 'சென்டிமென்ட் சர்ப்ரைஸ்' காத்திருந்தது.

படத் திரையிடலுக்கு முன்பாக, திரையில் முதலமைச்சர் விஜய்யின் மாஸான 'புரோமோஷன் வீடியோ' ஒன்று போடப்பட்டது. அதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் பர்வேஸ், அப்படியே 'எமோஷனல்' ஆகி, கண் கலங்கி கண்ணீர் விட்டுவிட்டார்! "அடடா... அமைச்சரே ஃபீல் பண்ணிட்டாரே!" எனப் பக்கத்திலிருந்த தவெகவினரும், ரசிகர்களும் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்த அமைச்சர் பர்வேஸ், தியேட்டர் விசில் சத்தங்களுக்கும், ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் இடையே ஒட்டுமொத்த ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து 'ஜனநாயகன்' படத்தைக் கண்டு களித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User