CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலையை.!'- பிளெமிங்

May 19, 2026 - 13:32
0
CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலையை.!'-  பிளெமிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி.

இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து பயிற்சியாளர் பிளெமிங் பேசியிருக்கிறார்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

"கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி இவ்வளவு காலம் வழிநடத்திய ஒரு ஃபிரான்சைஸை ஒரு புதிய கேப்டனிடம் ஒப்படைப்பது என்பது ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

அதனால் அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும். ஆனால் ருதுராஜ் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார். இந்த அணியில் உள்ள வீரர்கள் மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

நிறைய விஷயங்களைக் கற்றுகொண்டு வருகிறார். எனவே, எதிர்காலத்தில் அவர் இந்த ஃபிரான்சைஸிற்கு ஒரு சிறந்த கேப்டனாக விளங்குவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றிருக்கிறார்.

தோனி
தோனி

தொடர்ந்து பேசிய அவர், " எம்.எஸ். தோனி இந்த ஆண்டு அணியுடன் அதிக நேரம் செலவழித்துள்ளார். இது அணிக்கும், பல இளம் வீரர்களுக்கும் மற்றும் ஒரு தொடர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. எனவே, அவர் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், அணியில் அவரது தாக்கம் மற்றும் செல்வாக்கு பெரிய அளவில் இருந்தது" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User