‛‛அப்படி ஒரு விபத்து... உங்களுக்குப் பயமே இல்லையா?’’ - டக்கார் ரேஸ் சாம்பியன் வாக்னர் `கூல்' பதில்

Sep 24, 2026 - 18:30
0
‛‛அப்படி ஒரு விபத்து... உங்களுக்குப் பயமே இல்லையா?’’ - டக்கார் ரேஸ் சாம்பியன் வாக்னர் `கூல்' பதில்

மாத்தியாஸ் வாக்னர் (Matthias Walkner) ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உலகின் புகழ்பெற்ற ஆஃப்-ரோடு மோட்டார் சைக்ளிஸ்ட் மற்றும் டக்கார் ரேஸ் சாம்பியன் ஆவார்.

தனது அனுபவத்தினாலேயே 2 ஆண்டுகள் வரை படுக்கையில் இருந்திருக்கிறார் மாத்தியாஸ் வாக்னர்.

ஆம், 2023-ல் தெற்கு ஆப்பிரிக்கா காட்டில் நடந்த ஒரு விபத்தில் முதுகுத்தண்டு ஃப்ராக்ச்சர் ஆகி, கால்களில் சரியான அடியுடன் 2 ஆண்டுகள் வரை படுக்கையில் இருந்திருக்கிறார் வாக்னர். அவரை சந்தித்து பேசினோம்.

‛‛உங்களுக்குப் பயமே இல்லையா; திரும்பவும் ரேஸுக்கே வந்திருக்கிறீர்களே?’’ என்றேன்.

‛‛இதில் பயப்பட எதுவும் இல்லை. சொல்லப்போனால் அலெர்ட்னெஸ்தான் அதிகமாகி இருக்கிறது. அது என் வாழ்வில் நடந்த மோசமான விஷயம். எங்கே ஆக்ஸிலரேட்டர் முறுக்க வேண்டும்; எங்கே கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்கிற ஒரு ஃபோக்கஸ் இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இப்போது நான் செம ஃபோக்கஸ்டு!’’ என்கிறார் ஜாலியாக.

‛‛உலகிலேயே நீங்கள் பைக் ஓட்ட டஃப்பாக நினைக்கும் இடம் என்றால் எது?’’ என்றேன்.

‛‛நான் தெற்கு அமெரிக்கா, பொலிவியா, லிபியா, தெற்கு ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா என்று பல நாடுகளில் நான் பைக் ஓட்டியிருக்கிறேன். எல்லாமே டஃப்பான ஏரியாக்கள்தான். ஆனாலும் நான் மிகவும் கடினமாகக் கருதுவது சிலே, அர்ஜென்டினா, பொலிவியா ட்ராக்குகளைத்தான். அதிலும் பொலிவியா இருக்கிறதே… 5,000 அடி கடல் மட்டத்தில் இருந்து அல்டிட்யூடில் பைக்கை ஓட்டுவதே… பயங்கர டாஸ்க். பைக் பாதி மூழ்கிவிடும் அளவுக்குப் பனிக்கட்டிகளும், வழுக்கும் பனி ஏரியும்… எம்மாடியோவ்!’ என்று அவர் சொல்லும்போதே திகில் தெரிகிறது.

கேடிஎம் பைக்கைத் தவிர வேறெந்த பைக்கையும் அங்கு நினைத்துப் பார்க்க முடியாது என்றும் சொன்னார் மாத்தியாஸ். பிடித்த ரேஸர் மைக்கேல் ஷூமேக்கர், பிடித்த பைக் கேடிஎம் என்றும் சொன்னார்.

நம் ஊர் விஷயத்துக்கு வந்தேன். ‛‛உங்களுக்கு நடிகராக இருந்து ரேஸராக மாறிய கார் ரேஸர் அஜித்குமார் தெரியுமா?’’

‛‛சாரி, எனக்கு இந்தியாவைப் பொருத்தவரை நரேன் கார்த்திகேயன், டக்காரைப் (Dakar Rally) பொருத்தவரை சந்தோஷ் மற்றும் ஆசிஷ் இவர்கள் மட்டும்தான் தெரியும். அதிலும் போன டக்கார் ராலியில் என் பைக்கின் கிளட்ச் ப்ளேட் செயலிழந்து போக, ஆசிஷ் உதவியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது!’’ என்றும் சொன்னார் நெகிழ்வுடன்.

தல, டக்கார் ரேஸிலும் ஒரு கால் வையுங்களேன்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User