நெல்லை: "இன்ஸ்டா பழக்கத்தால் இளைஞர்களுடன் திருமணம் மீறிய உறவில் மனைவி" - கொலை செய்த கணவன் கைது

Nov 08, 2026 - 20:00
0
நெல்லை: "இன்ஸ்டா பழக்கத்தால் இளைஞர்களுடன் திருமணம் மீறிய உறவில் மனைவி" - கொலை செய்த கணவன் கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். நெல்லையில் இயங்கி வரும் தனியார் குக்கர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக பிரச்னை தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வனோபி இறந்து கிடந்தாராம். அருணாச்சலத்தின் புகாரின் அடிப்படையில் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர். வனோபி கழுத்து தெரித்து கொலை செய்யப்பட்டது போலீஸாருக்கு முதல்கட்டமாக தெரிய வந்தது.

பாப்பாக்குடி காவல் நிலையம்

இதனையடுத்து போலீஸார் அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தினம் தினம் சண்டை போட்டுக்கொள்வார்கள் என, அக்கம் பக்கத்தினரும் சொல்ல அருணாச்சலத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவி வனோபியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ”நான் என் மனைவி வனோபியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பார். எனது குழந்தையையும் சரிவர கவனிப்பதில்லை.

இதனால் அவளை கண்டித்து வந்தேன். இதற்கிடையில் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் இன்ஸ்டாவில் சென்னை மற்றும் கடலூரைச் சேர்ந்த 2 இளைஞர்களிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது எனக்குத் தெரிய வந்ததும் கண்டித்தேன். இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அந்த இளைஞர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோவை அவரது செல்போனில் பார்த்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர்கள் பாப்பாக்குடிக்கு வந்து அறை எடுத்து ஒன்றாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் என்னோட உறவினர்களுக்கு தெரிய வந்து என்னை ஏளனமாகப் பேசினார்கள்.

பாப்பாக்குடி காவல் நிலையம்

இதனால் எனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. கடந்த 7-ம் தேதி பிற்பகலில் மீண்டும் எங்களுக்குள் சண்டை வந்தது. ”அவர்களுடனான பழக்கத்தை கைவிட முடியாது” என மீண்டும் மீண்டும் என் மனைவி சொன்னதால் கோபத்தில் அவளை அடித்ததுடன் பெல்ட்டால் கழுத்தை நெரித்தேன். இதில் அவள் இறந்துவிட்டதால் என் குழந்தையை தூக்கிக் கொண்டு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு என் மனைவியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என போலீஸில் சொன்னேன்” எனக் கூறியுள்ளார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User