`ஏகன் அநேகனாகிய அற்புதம்' அதிகாலையில் சுடர்விட்ட பரணி தீபம் - மாலை 6 மணிக்கு மகாதீப தரிசனம்!

Nov 24, 2026 - 12:30
0
`ஏகன் அநேகனாகிய அற்புதம்' அதிகாலையில் சுடர்விட்ட பரணி தீபம் - மாலை 6 மணிக்கு மகாதீப தரிசனம்!

கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வரும் திருக்கார்த்திகை உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி எதிரே பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஈசனின் ஐந்தொழில்களைக் குறிக்கும் வகையிலும், `ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்த ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தரிசித்தால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம்.

பரணி தீபம்

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. மாலையில் கோயில் கொடிமரம் அருகே அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி காட்சியளித்த சில நிமிடங்களில் மலை உச்சியில் மகாதீபம் சுடர்விடும். கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User