'இன்றைய இளைஞர்களும் நாளைய முதியோர் என்பதை மறந்துவிடக் கூடாது' - முதியோர் நல விழாவில் வி.எஸ்.நடராஜன்

Oct 12, 2026 - 11:31
0
'இன்றைய  இளைஞர்களும் நாளைய முதியோர் என்பதை மறந்துவிடக் கூடாது' - முதியோர் நல விழாவில் வி.எஸ்.நடராஜன்

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில், வயதானவர்கள் பலரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதும் இயல்பாகிவிட்டது

இதன் பொருட்டே ஒரு காலத்தில் எங்கே இருக்கிறது? என்று, தேடி சென்ற ஆதரவற்றோர் ஆசிரமங்களிங்களிலும், முதியோர் இல்லங்களும், தற்போது அதிகரித்துக்கொண்டே செலகின்றன. இத்தகைய சூழலை மாற்றியமைப்பதை நோக்கமாக கொண்டு, டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்களால் 2017ஆம் ஆண்டு டாக்டர்.வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையானது தொடங்கப்பட்டது.

முதியோர் நல விழா

இந்த அமைப்பானது முதியோருகளுக்கு தேவையான பல்வேறு உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சனைக்கு தகுந்த ஆலோசனைகளையும், முதுமை காலத்தை இனியாக்கும் வழிகளையும் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், கடந்த ஏழு வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே முதியவர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நிகழ்த்தி வருகிறது.

முதியோர் நல விழா

இதன் ஒரு பகுதியாக "முதியோர் தின விழாவானது" சென்னை தியாகராயர் நகரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில், பத்திற்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியதோடு, பல்வேறு மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள் என இவ்விழாவானது முதியவர்களை புத்துணர்ச்சியூட்டும் விதமாகவே இருந்தது.

எண்ணற முதியவர்களும், இளைஞர்களும் இவ்விழாவில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமைவுரையாற்றிய மூத்த முதுமை நல மருத்துவர் டாகடர்.வி.எஸ்.நடராஜன், "உடல்நலம், மனநலம், நிதி நலம் மற்றும் குடும்பம் நிலம் ஆகியவற்றை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினால், முதுமைக்காலத்தை சுகமாக மாற்றலாம்.

புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்ககொள்ளுதலின் முக்கியத்துவத்தையும் மற்றும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளல் வேண்டும்.

மேலும்வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது அவசியமானது எனவும் கூறினார். வயது கூட கூட மனிதனின் தாக உணர்ச்சியானது குறைத்துக்கொண்டே செல்லும் எனவும், இதனால், தாகம் எடுக்கவில்லை என்றாலும் நாமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மற்றவர்களை நாம் வாழ்த்தும் போது நம்முடைய உள்ளமும் மகிழ்ச்சியடையும். அனைவருமே மற்றவர்களை வாழ்த்தி தாமும் மகிழ வேண்டும் என்று கூறினார்.

வி.எஸ் நடராஜன்

முதியவர்களும் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஆலோசனை வழங்கி கட்டாயமாக அதைதான் செய்தாக வேண்டும் என்றெல்லாம் சொல்லுதல் கூடாது. ஒருவரின் மேல் அன்பு வைக்கலாம், ஆனால், அவரையே சார்ந்து வாழக்கூடாது அது என்றுமே பேராபத்தை மனதளவிலும் உடலளவிலும் ஏற்படுத்திவிடும்.

கடந்த காலம் கசப்பான நினைவுகளை விட்டுட்டு, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள். வாழக்கை வசந்தமயமாகும் எனறு கூறினார்.

இன்றைய இளைஞர்களும் நாளை முதியவர்கள் என்பதை ஒரு போதும் மறந்துவிட கூடாது. நாம் நம் பெற்றோர்களுக்கு இன்று என்ன செய்கிறோமோ அதுதான் நாளை நம் பிள்ளைகளும் நமக்கு செய்வார்கள். எனவே இளைய சமூகம் தங்களின் பெற்றோர்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற அன்பு கட்டளையோடு உரையை நிறைவு செய்தார்.

முதியவர்களும் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டால், எந்தவொரு பயமின்றி கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்ற முதியோர்களுக்கான அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்களும் வழங்கப்பட்டது.

மேலும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொண்டு, பற்கள், ஆயுர்வேதம், முதியோருக்கான காப்பீடு திட்டங்கள், நிதி ஆலோசனை மற்றும் இடைஇடையே கலை நிகழ்ச்சிகளுடன் முதியோரை மகிழச்சியூட்டும் விதமாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User