இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா: புலி அடைப்பிடத்தில் நுழைந்தவர் உயிரிழப்பு; பதற வைக்கும் வீடியோ

Oct 11, 2026 - 11:00
0
இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா: புலி அடைப்பிடத்தில் நுழைந்தவர் உயிரிழப்பு; பதற வைக்கும் வீடியோ

இங்கிலாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில், புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர், அதன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள Yorkshire Wildlife Park பூங்காவில், அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 1.35 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஒருவர் நுழைந்ததாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவசர கால மருத்துவக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது அடையாளம் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. புலிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு மேலும் ஆபத்து இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் இணையத்தில் பரவி வருவதால், அவற்றைப் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பூங்காவின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அந்த நபர் புலி அடைக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த சூழல் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User