விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Oct 30, 2026 - 16:30
0
விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்து வந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரியவர, சிறுமியைக் கண்டித்திருக்கின்றனர்.

அத்துடன் அவரை வி.பரங்கனி கிராமத்துக்கே அழைத்து வந்த பெற்றோர், அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அதன்பிறகும் அந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார் சிறுமி. அதை பெற்றோர் மீண்டும் கண்டித்திருக்கின்றனர். ஆனால் காதலைக் கைவிட மறுத்த சிறுமி, காதலனுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

சிறுமியைக் கொலை செய்த தந்தை
கைது

இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிறுமியின் தாய் நேற்று இரவு வேலூருக்குச் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார் சிவசாத்திரி.

தொடர்ந்து தன்னுடைய சகோதரருக்கு போன் செய்த அவர், `சின்னவளைக் கழுத்தை நெரிச்சிப் போட்டுட்டேன்' என்று தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டுப் பதறிப் போன அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.

அப்போது சிவசாத்திரி அமைதியாக அமர்ந்திருந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த சிறுமியை அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சிவசாத்திரியைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User