வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: ஆந்திராவில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

Oct 31, 2026 - 17:30
0
வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: ஆந்திராவில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது நடந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்குச் சங்கிலி ரம்பம் (chainsaw) பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

மாணவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சந்திரபாபு நாயுடு பதிவு
சந்திரபாபு நாயுடு பதிவு

சந்திரபாபு நாயுடு பதிவு

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே பத்தாம் வகுப்பு மாணவி மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், விவரிக்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து நமது பெண் குழந்தைகளை இலக்கு வைக்கும் தாக்குதல்தாரிகளுக்கு நமது சமூகத்தில் எள்ளளவும் இடமில்லை.

பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நலம் குறித்து நான் தொடர்ந்து தெரிந்துகொண்டு வருகிறேன். அவருக்கு உயர்தர முன்னுரிமை சிகிச்சை அளிக்குமாறு மருத்துவக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் கொடூர மிருகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, மிகக் கடுமையான சட்டத் தண்டனையை விரைந்து வழங்கிடக் காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் நாரா பதிவு

ஆந்திரப் பிரதேச அமைச்சர்களில் ஒருவரான லோகேஷ் நாரா, “வகுப்பறைக்குள் சிறுநீர் தேங்கியிருந்த நிலையில் என் குட்டித் தங்கையைப் பார்த்த பிறகு என் கண்கள் கண்ணீரை நிறுத்துவேனா என்றிருந்தது.

என் இதயம் கனத்துப்போனது. இந்தப் பாலியல் வன்கொடுமையாளர்களின் கொடூர வெறி நம்மை ஆழ்ந்த வேதனையில் தள்ளியுள்ளது.

இந்த வெறியர்களை நமது இரும்புக்கரம் கொண்டு மிதித்து நசுக்குவோம்.

பெண்களையோ, சிறுமிகளையோ ஏறிட்டுப் பார்க்கவே அஞ்சி நடுங்கும் அளவுக்கு நிலைமையை மாற்றுவோம். எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுபவர்கள் அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் நாரா பதிவு
லோகேஷ் நாரா பதிவு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User