ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

Oct 31, 2026 - 17:30
0
ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ​​21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துடன் பத்தாம் வகுப்பறைக்குள் நுழைந்தார். அங்கு யாரும் எதிர்பாராத விதமாக ரம்பத்தால் இரண்டு மாணவிகளைத் தாக்கினார். இதில் இரண்டு மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். ரம்பத்தால் தாக்கிய வாலிபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

போலீஸாரின் விசாரணையில் மாணவிகளை தாக்கிய நபரின் பெயர் ஹேமந்த் என்கிற 'டம்மு' என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ரயில் மூலம் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அவர் தர்மவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தர்மவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் தாக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரது உறவினர் என்று தெரிய வந்துள்ளது. ஆசிரியர் முன்னிலையில் நடந்த இத் தாக்குதல் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இத் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``ராப்தாடு ஜட் பி (ZP) உயர்நிலைப் பள்ளியில்,

பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் வகுப்பறைக்குள்ளேயே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. பள்ளிகளுக்குள் நமது சிறுமிகளைத் தாக்கும் குற்றவாளிகளுக்கு நம் சமூகத்தில் இடமில்லை."என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User