சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முதியவர்; மருத்துவமனையிலிருந்து தப்பி ஒட்டம்!

Oct 31, 2026 - 17:30
0
சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முதியவர்; மருத்துவமனையிலிருந்து தப்பி ஒட்டம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் சிறைகளிலிருந்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். அதைத் தொடர்ந்து தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் சிறைத்துறை இயக்குநராக சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகும் கோவை சிறையிலிருந்து கைதி ஒருவர் தபபி ஓடினார். சென்னை புழல், தேனி ஆகிய சிறைகளிலிருந்து தப்பி ஓடிய கைதிகளை போலீஸார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். கவனக்குறைவாக இருந்த சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர்கள் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் டிரைவர் டேவிட் (60) என்பவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர், டிரைவர் டேவிட்டைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரைப் பிடித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தப்பி ஓட்டம்!

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், டிரைவர் டேவிட் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்தநிலையில் டேவிட்டை பொதுமக்களில் சிலர் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் காயமடைந்த டேவிட், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் பாதுகாப்புக்காக மருத்துவமனைக்கு சில காவலர்கள் சென்றிருந்தனர். சிகிச்சை பெற்று வந்த டேவிட், மருத்துவமனையிலிருந்து தப்பி ஒடிவிட்டார். அவரைக் காணவில்லை என்று போலீஸார், தங்களின் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு டிரைவர் டேவிட்டை போலீஸார் தேடி வருகிறார்கள். போலீஸ் பிடியிலிருந்து முதியவர் தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User