`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

Nov 01, 2026 - 17:00
0
`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

புனே அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஏக்தா பங்காட் என்ற பெண், பல வருடங்களாக முதுகுத் தண்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஏக்தாவின் கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஏக்தா தனது மகனை அழைத்துக் கொண்டு கட்டடத்தின் 18வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீட்டில் ஏழு முதல் எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிவைத்திருந்தார். போலீசார் அக்கடிதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கடிதத்தில் ஏக்தா தனது கணவர் மறுதிருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் தனது கணவர் மீது தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதி இருந்தார்.

சம்பவம் நடந்த கட்டடம்

அவரது மரணத்திற்குப் பிறகு அவரை மறுமணம் செய்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவர் தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கவலைகளை கடிதத்தில் தெரிவித்து இருந்தார். தான் இல்லாததைப் புரிந்து கொள்ள மகன் மிகவும் போராடக்கூடும் என்றும், எனவே தனது மகனை தன்னுடன் அழைத்துச் செல்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தான் இறந்த பிறகு மகன் தனது தாயைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்பான் என்று கவலை தெரிவித்து இருந்தார்.

மேலும் குழந்தை இருந்தால் தனது கணவருக்கு மறுமணம் செய்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என அச்சம் தெரிவித்து இருந்தார். இத்தற்கொலை குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏக்தா பல ஆண்டுகளாக முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் குணமடையவில்லை. எனவே மன அழுத்தத்தில் இருந்த ஏக்தா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User