"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

Oct 29, 2026 - 14:31
0
"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.

ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இவரின் மகன்தான் சதானந்தம்.

சதானந்தம்
சதானந்தம்

சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட சதானந்தம் கிதார் இசையில் கைதேர்ந்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் நண்பர். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இருவரும் ஒன்றாக இசைக் கலைஞர்களாய் பணிபுரிந்த அனுபவத்தைப் பல மேடைகளில் இளையராஜா பகிர்ந்திருக்கிறார். இளையராஜா இசைக்குழுவில் 40 ஆண்டுகளுக்கு மேல் முதன்மை கிதார் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் இளையராஜா சதானந்ததிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆரம்பக் காலத்தில் இருந்து நீண்ட காலமாக என்னுடன் பணிப்புரிந்த சதானந்தம் அவர்கள் இன்று காலமாகிவிட்டார் என்பதை அறிந்து நான் மிகவும் துக்கமடைந்தேன்.

இளையராஜா
இளையராஜா

காலமானவர்களை நான் அந்த நிலையில் பார்ப்பது கிடையாது. பார்ப்பதை விரும்பவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் என்னுடன் உயிருடன் பணியாற்றியவர்கள், வாழ்ந்தவர்கள், என் உணர்வோடு கலந்தவர்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User