Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

Oct 26, 2026 - 21:30
0
Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'-  விஜய் தேவரகொண்டாவின்  சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

அதில் தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவைத் திருமணம் செய்துகொள்ள நூறு முறை கேட்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா கூறிய கருத்து பேசுபொருளானது.

சமூக வலைதளங்களில் விஜய் தேவரகொண்டாவின் கருத்தில் ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்திருக்கிறார்.

 'காபி வித் கரண்'
'காபி வித் கரண்'

'என்னதான் நடக்கிறது இங்கே?'

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "இணையத்தில் இருக்கும் என் அன்பான மக்களே! மிகுந்த அன்போடும், அதே சமயம் எப்போதும் கசப்பான எண்ணங்களோடும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கும் விஜ்ஜுவுக்கும் இடையிலான இந்த விவகாரம் குறித்து என்னுடைய சிறிய விளக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்களுடைய நேர்காணலைச் சுற்றி தற்போது உருவாகியிருக்கும் பரபரப்பு, மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது போல் தெரியவில்லை; மாறாக, தங்கள் கோபத்தை வெளிப்படுத்த யாரையாவது தேடும் ஒரு கும்பலைப் போல இருக்கிறது. எங்கள் இருவரின் சமூக வலைதளப் பக்கங்களிலும் தேவையற்ற விமர்சனங்கள், கருத்துகள் மற்றும் கேட்கப்படாத அறிவுரைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

மக்கள் எங்களை அணுகிய விதத்தையும், அவர்கள் தங்களின் கருத்துகளைத் திணித்ததையும் பார்த்து நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். 'என்னதான் நடக்கிறது இங்கே?' என்று யோசிக்க வைத்தது.

அவருக்கு அவகாசம் தேவைப்பட்டதும் நியாயமானதுதான்!

வாழ்க்கையில் நான் என்ன விரும்புகிறேன் என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது சரி என்றால் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க அவருக்குச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதும் நியாயமானதுதான். அது எங்களுக்கிடையேயான காதலை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை. நான் முழுக்க முழுக்க உணர்வுகளால் இயங்குபவள்; அவர் யோசித்து நிதானமாகச் செயல்படுபவர். வாழ்க்கை சிறக்க இந்த இரண்டு குணங்களுமே தேவை.

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது காதலைக் காட்டுவதற்காக மண்டியிட்டு மோதிரம் அணிவிக்கும் வெறும் சடங்கு மட்டுமல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. ஒன்றாக இணைந்து ஒரு அழகான வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் உண்மையான திருமணம். இதுவரை அதை நாங்கள் சிறப்பாகவே செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன்

என் கணவர் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது, இதில் என்ன தவறு? நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால், வேறு எதற்காக அவரைத் திருமணம் செய்ய வேண்டும்? அவர்தான் என் வாழ்நாள் துணை. சாதாரண நாட்களிலும், கஷ்டமான தருணங்களிலும் எனக்குத் தோள கொடுக்கும் நண்பர்; என் குழந்தைகளின் தந்தை; நான் முதுமையடையும் வரை என்னோடு வாழப்போகும் மனிதர்.

உங்கள் மீது ஆழமான காதல் கொண்ட ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுங்கள். திருமணத்திற்குப் பிறகும் அவரைப் பார்த்து, 'நாம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமா?' என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு அவர் உங்கள் மீது அன்பைப் பொழிய வேண்டும். அவரை நான் நூறு முறை அல்ல, ஆயிரம் முறை கூட மீண்டும் திருமணம் செய்துகொள்வேன்.

நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த உழைப்பாலும் தேர்வுகளாலும் இந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறோம். எங்களுக்கான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுயாட்சியும் அறிவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தோம்; வாழ்வின் இறுதிவரை மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்போம்.

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சிகள், மன அழுத்தங்கள் என அனைத்தையும் கடந்து, ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொள்வதற்குப் போதுமான நேரத்தையும் இடைவெளியையும் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் அந்த உரையாடலின் நோக்கம்" என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User