`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' - அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

Jun 29, 2026 - 14:01
0
`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' - அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம பந்தி விருந்து நடைபெற்றது.‌ மேலும், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

பவானி நகராட்சி மட்டுமன்றி ஜம்பை, தொட்டில் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை, சட்டைகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் விஜய் பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, "கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்” என பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User