Doctor Vikatan: கேட்டராக்ட் செய்த கண்களில் அரிப்பு; அதே மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற வேண்டுமா?

Oct 15, 2026 - 08:01
0
Doctor Vikatan: கேட்டராக்ட் செய்த கண்களில் அரிப்பு; அதே மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற வேண்டுமா?

Doctor Vikatan: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். பூச்சி பட்டதாலா அல்லது தூசி விழுந்ததால என்று தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாகக் கண்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

லேசாகச் சிவந்தும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அணுக வேண்டுமா? அருகில் இருக்கும் கண் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

 விஜய் ஷங்கர்
விஜய் ஷங்கர்

வழக்கமாக கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்த பிறகு, கண் சிவப்பாக இருப்பது, எரிச்சல் (irritation) இருப்பது அல்லது கண்ணுக்குள் ஏதோ உறுத்துவது போன்ற உணர்வுகள் (foreign body sensation) இருந்தால், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைச் சென்று பார்ப்பது நல்லது.

அறுவை சிகிச்சை செய்தபோதே அந்த  மருத்துவர் நிச்சயம் எப்போது வந்து பார்க்க வேண்டும், எத்தனை முறை, என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும் என்ற அட்டவணையைக் கொடுத்திருப்பார். மருத்துவர் குறிப்பிட்டபடி கண் சொட்டு மருந்துகளை (Eye drops) சரியாகப் போட வேண்டும். மேலும், தொற்று (Infection) ஏற்படுவதைத் தடுக்க மருத்துவர் பரிந்துரைத்த பக்கவாட்டு பாதுகாப்பு கொண்ட கண்ணாடியை (Side cover glass) பயன்படுத்த வேண்டும்.

தொற்று (Infection) ஏற்படுவதைத் தடுக்க மருத்துவர் பரிந்துரைத்த பக்கவாட்டு பாதுகாப்பு கொண்ட கண்ணாடியை (Side cover glass) பயன்படுத்த வேண்டும்.

இன்ன காரணத்தினால்தான் கண்களில் அரிப்பும், சிவப்பும் ஏற்பட்டது என்பது உங்களுக்கே உறுதியாகத் தெரியவில்லை. எனவே, இப்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் சென்று காண்பிப்பதே சிறந்தது. அவரே நிலைமையைச் சரியாகப் பரிசோதித்து, வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சையை அளிப்பார்.

டாக்டர் விஜய் ஷங்கர்:

சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User