ஜீன்ஸ் பேன்ட்டில் குட்டி பாக்கெட் எதற்கு? இது தெரியாமப் போச்சே?! - 2

Mar 24, 2026 - 10:01
 0
ஜீன்ஸ் பேன்ட்டில் குட்டி பாக்கெட் எதற்கு? இது தெரியாமப் போச்சே?! - 2

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்கள், கவ்பாய்ஸ், தச்சர்கள், ரயில்வே தொழிலாளர்கள் எனக் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள்தான் இண்டிகோ நிற டெனிம் ஜீன்ஸ் பேன்ட்டை அதிகம் பயன்படுத்தினர்.

Watch pocket
Watch pocket

அக்காலத்தில் அவர்களிடம் கைக்கடிகாரங்கள் புழக்கத்தில் இல்லை; சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரங்களையே பயன்படுத்தினர். விலைமதிப்புமிக்க அந்தக் கடிகாரங்கள் வேலை செய்யும்போது கீழே விழுந்தோ அல்லது கீறல் விழுந்தோ உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைப் பத்திரமாக வைக்க ஒரு சிறிய இடம் தேவைப்பட்டது.

இதற்காகவே 1890-களில் லீவைஸ் நிறுவனம் தங்களது புகழ்பெற்ற 'Lot 501' ஜீன்ஸ் மாடலில் இந்தச் சிறிய பாக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இதனாலேயே அதிகாரபூர்வமாக இதற்கு Watch pocket என்று பெயர்.

லீவைஸ் நிறுவனம் 1873-ல் காப்புரிமை பெற்ற முதல் ஜீன்ஸில் மொத்தம் 4 பாக்கெட்டுகள் மட்டுமே இருந்தன (முன்புறம் 3, பின்புறம் 1). 1901-ம் ஆண்டுதான் பின்புறம் 2-வது பாக்கெட் அறிமுகமானது. எனவே, இந்த வாட்ச் பாக்கெட் ஜீன்ஸின் ஆதி வடிவமைப்புகளில் ஒன்றாகும்.

Watch pocket
Watch pocket

காலப்போக்கில் பாக்கெட் வாட்ச்களின் பயன்பாடு இல்லாமல் போனாலும், இந்தக் குட்டி பாக்கெட்டின் வடிவமைப்பு மாறவே இல்லை. வாட்ச் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்கள் தேவைக்கேற்ப சில்லறை காசுகள், பஸ் டிக்கெட், தீப்பெட்டி, மற்றும் லைட்டர்களை வைக்கப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஒரு காலத்தில் தொழிலாளர்களின் அவசியத் தேவையாக இருந்த இந்தக் குட்டி பாக்கெட், 150 ஆண்டுகளைக் கடந்த பின்பும் லீவைஸ் நிறுவனத்தின் பாரம்பர்ய அடையாளமாக இன்றும் மாறாமல் தொடர்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0