"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு

Jun 14, 2026 - 15:32
0
"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், சட்டோகிராம் பகுதியில் தன்னை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

வங்கதேச கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

வங்கதேச வீரர் நயீம் ஹசன்
வங்கதேச வீரர் நயீம் ஹசன்

இதனைத் தொடர்ந்து, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான வங்கதேச அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் நயீம் ஹசன் இடம்பெற்றிருக்கிறார்.

வங்கதேசத்தின் லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு நயீம் ஹசன் விமானம் மூலம் அந்நாட்டிலுள்ள சட்டோகிராம் சென்றிருக்கிறார். அதன்பின் அவர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக வீடு திரும்பியபோது, செல்லும் வழியில் காவல்துறையினர் ஆட்டோவை வழிமறித்து நயீம் ஹசனைத் துன்புறுத்தி, கொடூரத் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயீம் ஹசன், "ஆரம்பத்தில் நான் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எனது பைகளைச் சோதிக்குமாறு கூறினேன்.

ஆனால், அவர்கள் திடீரென எனது கழுத்தைப் பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.

வங்கதேச வீரர் நயீம் ஹசன்
வங்கதேச வீரர் நயீம் ஹசன்

நான் யார் என்று பலமுறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். போலீசார் என்னை லத்திகளால் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்கிருந்த பொறுப்பு அதிகாரி என்னிடம் பேசும்போது கண்களைக் கீழே வைத்தவாறு பேசுமாறு மிரட்டினார்.

அவர்கள் உண்மையான போலீசாராக இருந்திருந்தால், ஏன் என்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றாமல் சாதாரண ஆட்டோவில் ஏற்ற முயன்றார்கள்? இந்த முழு சம்பவம் குறித்தும் முறையான விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும்" கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User